தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு அரசு கல்லூரிகளில் 200 இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளது.
எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கவுன்சிலிங் ஆண்டுதோறும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நடக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஆயிரத்து 945 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 292 இடங்கள் போகும். மாநிலத்தில் உள்ள 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 674 இடங்கள் கிடைக்கும்.
இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளான எம்.எம்.சி. என்று அழைக்கப்படும் சென்னை மருத்துவக் கல்லூரியிலும், சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் தலா 150 இடங்கள் உள்ளன. இந்த இரண்டு கல்லூரிகளிலும் உள்ள இடங்களை தலா 250 என உயர்த்த விரும்பிய தமிழக அரசு அதற்கான அனுமதி கேட்டு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்தது.
இதையடுத்து, இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய கட்டமைப்பு வசதி உள்ளதா, நோயாளிகள் எத்தனைபேர் வருகிறார்கள், மாணவர்கள் படிக்க போதிய வசதிகள் உள்ளதா என்று அறிய மருத்துவக்குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர்.
இன்னும் 20 நாட்களுக்குள் இந்த 2 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரித்து அதற்கான அனுமதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நல்லதோர் தகவல்! மாணவ, மானவியருக்கு மிகவும் பயணுள்ளதாகவே அமையும். மருத்துவராக வரக் கனவுகாணும் மாணவச் செல்வங்களே மதிப்பெண்களை அதிகம் பெற்று மருத்துவக் கல்லூரிகளை நோக்கி வீருநடை போடுங்கள்! இப்போ உங்க காட்டுலெ மழை!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross