ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற தமிழக சட்டசபைக்கான தேர்தலில் 49-O பிரிவுப்படி வாக்களித்தோர் எண்ணிக்கை மாவட்டங்கள் வாரியாக தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 24,824 வாக்காளர்கள் 49-O பிரிவை பயன்படுத்தி உள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் (2009)- தமிழகத்தில் - 18,162 வாக்காளர்களே அப்பிரிவைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தல்களை விட இத்தேர்தலில் 49-O பிரிவை அதிகமாக பயன்படுத்தி இருப்பது, இப்பிரிவு குறித்த தகவல் பரவலாக அறியப்பட்டிருப்பதை உணர்த்தினாலும், இப்பிரிவு குறித்த சில தவறான கருத்துக்களும் நிலவுவதாக தெரிகிறது.
உதாரணமாக, ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளரை விட 49-O பிரிவு வாக்குகள் அதிகம் எனில் மீண்டும் தேர்தல் - அத்தொகுதியில் நடத்தப்படவேண்டும் என்ற கருத்து. இதற்கு சட்டத்தில் இடமில்லை.
மேலும் முதலாவதாக மற்றும் இரண்டாவதாக வந்த வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம், 49-O வாக்குகளுக்கு சமமாக இருந்தால், மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கருத்து. இதற்கும் சட்டத்தில் இடமில்லை.
2011 தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மாவட்டங்கள் வாரியாக 49-O பிரிவு வாக்குகள்:-
(1) சென்னை - 3407
(2) கோயம்புத்தூர் - 3061
(3) திருப்பூர் - 1796
(4) காஞ்சிபுரம் - 1391
(5) திருவள்ளூர் - 1347
(6) நீலகிரி - 1306
(7) ஈரோடு - 1287
(8) திருநெல்வேலி - 1109
(9) திருச்சி - 1046
(10) சேலம் - 940
(11) தூத்துக்குடி - 879
(12) மதுரை - 783
(13) திண்டுக்கல் - 554
(14) தஞ்சாவூர் - 543
(15) வேலூர் - 543
(16) நாமக்கல் - 530
(17) கடலூர் - 430
(18) கிருஷ்ணகிரி - 381
(19) நாகப்பட்டினம் - 377
(20) தேனி - 336
(21) கரூர் - 335
(22) புதுக்கோட்டை - 331
(23) விழுப்புரம் - 280
(24) விருதுநகர் - 269
(25) தர்மபுரி - 252
(26) சிவகங்கை - 233
(27) திருவண்ணாமலை - 209
(28) ராமநாதபுரம் - 209
(29) பெரம்பலூர் - 203
(30) திருவாரூர் - 181
(31) கன்னியாக்குமரி - 170
(32) அரியலூர் - 106
நெய்வேலி, ரிஷிவந்தியம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், விழுப்புரம், அருப்புக்கோட்டை தொகுதிகளில் ஒரு வாக்காளர் கூட 49-O பிரிவை பயன்படுத்தவில்லை.
தொகுதிகள் வாரியாக 49-O பிரிவு உபயோக விபரம் காண இங்கு அழுத்தவும்
செய்தி திருத்தப்பட்டது |