பெங்களூர் காயல் நல மன்றத்தின் (KWAB) பொதுக்குழுக் கூட்டம் 08.05.2011 அன்று நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெங்களூர்வாழ் காயலர்களுக்கு அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நம் மன்றத்தின் நான்காவது பொதுக்குழுக் கூட்டம் இறையருளால் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 08.05.2011 அன்று மதியம் 02.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை, மன்றத்தின் முந்தைய கூட்டம் நடைபெற்ற அதே பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் (Lalbag garden) நடைபெறவிருக்கிறது.
நகர்நலன் குறித்த நல்ல பல அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படவுள்ளது. மன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்வளிக்கும் பொருட்டு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களையும் இடம்பெறச் செய்ய மன்ற நிர்வாகம் ஆசிக்கிறது.
மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதையே உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நாம் அனுப்பிய அழைப்பிதழாகக் கருத்திற்கொண்டு, குறித்த நேரத்தில் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வருமாறும், தங்களுக்கு அறிமுகமான நம் மன்ற உறுப்பினர்கள் மற்றும் காயலர்களுக்கு இத்தகவலை அவசியம் தெரியப்படுத்தி, அவர்களையும் கூட்டத்தில் பங்கேற்கச் செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமது குடும்பத்துடன் பெங்களூரில் வசிக்கும் காயலர்கள் குடும்ப சகிதமாக இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அனைத்து உறுப்பினர்களும், கூட்டத்திற்கு வரும்போது மறவாமல் அடுத்த மூன்று மாதங்களுக்கான மன்ற உறுப்பினர் சந்தாவைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கூட்டம் குறித்த மேலதிக விபரங்களுக்கு,
கே.கே.எஸ்.ஸாலிஹ் (98450 05093),
எல்.எம்.ஐ.அப்துல் காதிர் (98458 27571),
அப்துல் காதிர் (96320 85922)
ஆகியோரில் ஒருவரை அவர்களின் கைபேசி எண்ணில், மாலை 06.00 மணிக்குப் பிறகு தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
மற்றும்
அப்துல் காதிர்,
துணைச் செயலாளர்கள்,
காயல் நல மன்றம், பெங்களூர், கர்நாடக மாநிலம். |