காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலும், குட்டியப்பா பள்ளியிலும் செயல்பட்டு வருகிறது சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர்.
இஸ்லாம் மார்க்கத்தை தாமாக முன்வந்து தம் வாழ்வியல் நெறியாக்கி வருவோருக்காக புனித குர்ஆன் கல்லூரி என்ற நிறுவனத்தை அமைத்து மூன்று மாத இஸ்லாமிய ஆரம்பக் கல்வி உள்ளிட்ட பணிகளைச் செய்து வருவதோடு, மாதந்தோறும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தஃவா சுற்றுப்பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஃவா சென்டர் பணிகளின் ஒரு பகுதியாக, முஸ்லிம் மாணவர்களை ஒழுக்க மாண்புகளோடும், உயர் சிந்தனைகளோடும் திகழச்செய்திடும் நோக்கில் அவ்வப்போது தர்பிய்யா - உளத்தூய்மை பயிற்சி முகாம்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். வரும் 24.04.2011 அன்று உளத்தூய்மைக்கான தஸ்கிய்யா 3ஆவது நிகழ்ச்சி தஃவா சென்டர் சார்பி நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இன்ஷாஅல்லாஹ், வரும் 24.04.2011 தேதியன்று காயல்பட்டினம் குட்டியாபள்ளி வளாகத்தில் “மனதோடு போராடு!” என்ற தலைப்பில் உளத்தூய்மைக்கான தஸ்கிய்யா 3ஆவது நிகழ்ச்சி எமது தஃவா சென்டர் நிர்வாகத்தால் நடத்தப்படவுள்ளது.
அன்று காலை 09.30 மணிக்குத் துவங்கி மதியம் 01.00 மணியுடன் முடிவடையும் இந்நிகழ்ச்சியில் “மனமே அமைதி பெறு!” என்ற தலைப்பில் அழைப்பாளர்கள் உரையாற்றவுள்ளனர்.
முகாமின் சிறப்பம்சமாக, நஃபிளான தொழுகைகளின் முக்கியத்துவம், நபிவழித் தொழுகைக்கான பயிற்சியை மவ்லவீ மீரான் தாவூதீ வழங்கவுள்ளார்.
உங்களது வருகையை இப்போதே முன்பதிவு செய்துகாள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கு, +91 96775 55548 என்ற எமது கைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஆரிஷ் கான்,
செய்தித் தொடர்பாளர்,
சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர்,
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். |