தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 13.04.2011 இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறுகிறது.
வாக்குப்பதிவை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட தேர்தல் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் உட்பட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் ஆயத்த நிலையில் உள்ளன.
வாக்குச்சாவடி கட்டமைப்பு, வாக்காளர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆயத்த நிலையில் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொருத்த வரை நூறு சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட தேர்தல் தலைமை அலுவலருமான சி.நா.மகேஷ்வரன் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, வாக்களிப்பது வாக்காளர் அனைவரின் கடமை என்பதை உணர்த்தும் வாசகங்கள் மாவட்டம் முழுக்க பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross