13 வது சட்டசபைக்கான தேர்தல் வரும் புதனன்று (ஏப்ரல் 13) தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதற்க்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியோடு நிறைவுற்றது. ஏப்ரல் 13 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து 9 மணிநேரம் வாக்குபதிவுகள் நடைபெறும். முடிவுகள் மே 13 அன்று வெளிவரும்.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 2748 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் ஆண் வேட்பாளர்கள் 2612, பெண் வேட்பாளர்கள் 136. குறைந்ததாக நாகை தொகுதியில் 4 வேட்பாளர்களும், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 31 வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
தமிழகத்தில் மொத்தம் 54,016 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செயப்பட்டுள்ளன. மாநிலத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4,59,50௦,620. ஆண் வாக்காளர்கள் 2,30௦,86,295. பெண் வாக்காளர்கள் 2 ,28,63,481. திருநங்கைகள் 844.
வாக்காளர் எண்ணிக்கையில் மாநிலத்தின் பெரிய தொகுதி - சோழிங்கநல்லூர் (வாக்காளர்கள் 3,40,615). வாக்காளர் எண்ணிக்கையில் மாநிலத்தின் சிறிய தொகுதி - கீழ்வேளூர் (வாக்காளர்கள் 1,40,127).
தேர்தலில் இரு முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. தி.மு.க. அணியில் தி.மு.க. 119 இடத்திலும், காங்கிரஸ் 63 இடத்திலும், பா.ம.க. 30 இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் 10 இடத்திலும், கொங்கு முன்னேற்ற கழகம் 7 இடத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடத்திலும், மூவேந்தர் முன்னேற்ற கழகம் 1 இடத்திலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. அணியில் அ.தி.மு.க. 160 இடத்திலும், தே.மு.தி.க. 41 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 12 இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் 10 இடத்திலும், மனிதநேய மக்கள் கட்சி 3 இடத்திலும், சமத்துவ மக்கள் கட்சி 2 இடத்திலும், புதிய தமிழகம் 2 இடத்திலும், மூவேந்தர் முன்னணி கழகம் 1 இடத்திலும், கொங்கு இளைஞர் பேரவை 1 இடத்திலும், இந்திய குடியரசு கட்சி 1 இடத்திலும், பார்வர்ட் பிளாக் 1 இடத்திலும் போட்டியிடுகின்றன. |