Re:... posted byVilack sma (jeddah)[27 January 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39098
இப்படி " ஆதரவற்று " சுற்றிதிரிபவைகளை பிடித்து தங்கள் பொறுப்பில் ஆதரவு கொடுத்தமைக்கு நன்றி . அதுபோன்றே ஆதரவின்றி திரியும் லொள்ளாவையும் பிடித்து நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் .
சில மாதங்களுக்கு முன்பு ஊரில் இருந்த சமயம் , என் உறவினர் வீட்டுக்கு அருகே ஒரு மாடு இறந்து கிடந்தது . அப்போது நகரமன்ற சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமி அவர்களிடம் , இதை அப்புறப்படுத்துங்கள் , இல்லையேல் நோய்கள் பரவ வாய்ப்புண்டு , என்று சொன்னதற்கு , அவர்களின் பதில் , " அதெல்லாம் முடியாது சார் . நான் இப்போது அப்புறப்படுத்தி விடுவேன் . இந்த நேரம் வரை சும்மா இருந்த மாட்டின் உரிமையாளர் திடீரென முளைத்து , நீங்கள்தான் அந்த மாட்டினை சாகடித்தீர்கள் என்று என்மீது பாய்வார் . அதனால் நாங்கள் இதை செய்ய மாட்டோம் " என்றார் . இவர் பேச்சிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது .
தற்போது உங்கள் ஆதரவில் இருக்கும் இந்த ஜீவன்கள் ஒருவேளை இறந்துவிட்டால் அதற்கு யார் பொறுப்பு ? உரிமையாளர் உரிமை கோராதவரை எத்தனை நாட்கள் உங்கள் அன்பு அரவணைப்பில் இந்த ஜீவன்கள் இருக்கும் ? அதன்பிறகு என்ன செய்வீர்கள்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross