செய்தி: காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு, தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் திடீர் வருகை! கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக நகர்மன்றத் தலைவரிடம் உறுதி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்லது நடக்கும் என்று நம்புவோமாக!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[29 January 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39112
நகராட்சி தலைவி அவர்களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த ஒரு ஆரம்ப நடவடிக்கை அறிகுறி. தலைவி அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்து தேவைகளையும் அத்தருணத்திலேயே நிறைவேற்ற முடியாவிட்டாலும் மிக மிக அவசர அவசிய தேவைகளையாவது சுகாதார அதிகாரி உடனடியாக செய்யவேண்டும். செய்வார் என்று எதிர்பார்ப்போமாக.
ஏனெனில் அவர் நமதூரைப்பற்றி கூறிய வார்த்தைகள்
அவரின் மனசாட்சிபடி உண்மை என்று நம்பினால்,
நமதூர் அரசு மருத்துவமனை விஷியமாக பலரும்,பல அமைப்புகளும் முயற்சித்துக்கொண்டிருக்கும் வேலையில்,
நம் நகரமன்ற தலைவி அவர்களின் தொடர் முயற்சின் தூண்டுதலின் காரணமாகவே சுகாதார அதிகாரி இங்கு வந்துள்ளதை நினைத்து தலைவி அவர்களுக்கு உள்ளப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் பல பாராட்டுக்குறிய நற்பணிகளின் இதுவும் ஒரு மேன்மைக்குறிய படிக்கட்டு!
தலைவி அவர்கள் முகியத்தேவைகளுக்குறிய முயற்சியை முனைப்படுத்தி வைத்து விட்டார்கள்,முடிவு யார் கையில் இருக்கிறது,ஆட்சியாளர்கள் கையிலா?அல்லது அன்று வந்த அதிகாரியின் கையிலா?ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். விடிவு வந்திடும் என்று நாமும் நம்புவோமாக!
அதுசரி, இந்த சாமு ஹாஜியார் அவரின் உருவத்திற்கேற்றவாறு உருண்டுகொண்டே ஊரை வலம் வருகிறாரே, ஊரின் வெள்ளப் பாதிப்பாக இருக்கட்டும் ,விபத்து பாதிப்பாக இருக்கட்டும், அன்றாடும் தேவை தேடும் ஒரு தனிமனிதனுடைய பாதிப்பாக இருக்கட்டும்,கந்தூரி கண்கவர் நிகழ்ச்சியாக இருக்கட்டும், கணக்கின்றிய காயல்நல சமூகபணி களமாக இருக்கட்டும் எந்த இடத்திலும் இலவம் பஞ்சுபோல் பறந்து வந்து ஒட்டிக்கொண்டு அவரது உன்னத சேவையைச் செய்யும் அந்த புண்ணியருக்கு நிகர் அப்புண்ணியரே, என்பதை எதையும் நன்றியுடனும் நடுநிலையுடனும் நோக்கும் நல் இதயத்தார்கள் ஏற்றுக்கொள்வார்கள்!
அவரது புண்ணியபணி மென்மேலும் தொடர்ந்து,அவரது சொந்த வாழ்விலும் பல வெற்றிகளை ஈன்று,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் என்றும் இன்புற்று
வாழ்ந்துயர்வாராக ஆமீன்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross