Re:...ஜெயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக வந்தால் ... posted bymackie noohuthambi (colombo)[01 February 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39139
ஜெயலலிதா அவர்கள் கடந்த நாடாளு மன்ற தேர்தல் கூட்டங்களில் பேசியபோது தான் கை காட்டக் கூடியவர் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் ஒரு கட்டத்தில் தானே இந்திய பிரதமராக வர விருப்பமும் வியூகமும் வகுத்தார்கள். 37 உறுப்பினர்களுடன் வெற்றி வாகை சூடி வெற்றி திருமகளாக - நினைத்ததை முடிப்பவராக அடையாளம் காணப்பட்டார்.
ஆனால் பாம்பு கட்டம் விளையாட்டில் பல ஏணிகளில் ஏறி உயரே சென்றாலும் 93 என்ற இலக்கை அடையும் போது அங்கு ஒரு பாம்பு 3 வது நம்பருக்கு இறக்கி நம்மை கேவலப் படுத்தி விடுவதுபோல், சொத்து குவிப்பு வழக்கில் மீள முடியாத ஒரு பின்னடைவை சந்திக்க நேர்ந்து விட்டது. அதன் விளைவு இன்று தமிழக சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் ஆசனத்தில் அமர்வதற்கே அச்சப் படுகின்ற அல்லது அதற்கு தான் தகுதியானவர் இல்லை என்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு ஆட்சியில் இந்த விஷயங்களை எல்லாம் யார் மண்டையில் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள். குபேர மலையே காணாமல் போய் விட்ட விந்தைகளை சகாயம் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கொட்டமடைக் காடு என்ன, வரை படத்தில் காயல்பட்டினம் இருக்கிறதே என்று எண்ணி திருப்தி பட்டுக் கொள்ளுங்கள்.மீண்டும் ஜெயலலிதா அவர்கள் முதல் அமைச்சராக வந்தால் இந்த தவறுகளை திருத்த சொல்லலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross