செய்தி: திருச்செந்தூர் - திருநெல்வேலிக்கு 6வது பயணியர் ரயில் சேவை! பிப். 09 அன்று மத்திய இரயில்வே அமைச்சர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கிறார்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
DMU ( டீசல் மெயின் லைன் யூனிட்) posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[07 February 2015] IP: 113.*.*.* China | Comment Reference Number: 39159
( 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள்).
இத்தனை படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் எதற்கு என்று புரியவில்லை . ஒருவேளை ‘செந்தூர் எக்ஸ்பிரஸ்’ ஐ பராமரிப்பு பணிகளுக்காக வெறுமனே நெல்லை சென்று கொண்டிருந்ததை இப்போது பயணிகள் ரயிலாக உபயோகப்படுத்த நிர்வாகம் முனைகிறதோ என்னவோ !!!
அவ்வாறு இருப்பின் ‘செந்தூர் எக்ஸ்பிரஸ்’ ரயிலின் சுத்தம் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் அதை அசுத்தப்படுத்தும் வாய்ப்புள்ளது .கால அட்டவனையை பார்க்கும்போது நெல்லை- திருச்செந்தூர் இருவழிகளிலும் 7 கிமீ தூரம்கொண்ட கடைசி ரயில் நிலையத்தை கடக்க ஏன் 40/45 நிமிடம் ஆகிறது என தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் மக்களுக்கு பயனளிக்கும் சேவைதான் இது .
எனினும் இந்த ரயில் சேவைகள் போதாது . காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் ரயில்கள் இருவழிகளிலும் இயக்கப்படவேண்டும். DMU ( டீசல் மெயின் லைன் யூனிட்) ரயில்களை இயக்கினால் இது சாத்தியமாகலாம். இதன் மூலம் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறைந்து விபத்துகளும் குறையும் . நமது MP கள் டெல்லியில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross