இக்கட்டுரை பயனுள்ள பல கருத்துக்களை விவரித்துள்ளது...!!! posted bySK Shameemul Islam (Chennai)[09 February 2015] IP: 111.*.*.* India | Comment Reference Number: 39164
என் சாச்சி மகன் தம்பி பீ.எஸ்.ஷாஹுல் ஹமீத் இன்னொரு ஹீலர் பாஸ்கர்தான். 6 மாதம் முன்பு அவனிடம் உரையாடிய போதே 200 மணி நேரத்திற்கும் மேலாக இணையத்தில் மேய்ந்து மென்ற இயற்கை வாழ்க்கை முறையை பற்றியும் அவனது நெருங்கிய உறவினர்களுக்கே அதை நடைமுறைப்படுத்தி பயன் பெறுவதையும் தடுப்பூசி போன்ற மெதுவகை நஞ்சு ஊசிகளை போடாமல் தவிர்த்து வருவதையும் அதில் குடும்பத்தவரை பயமின்றி ஏற்கவைக்க பெருமுயற்சி எடுத்து வருவதையும் கூறினான்.
இன்று எம் குடும்பத்தில் பலருக்கு அவன் ஒரு மருத்துவ ஆசான்.
இன்னொரு தகவல் அவன் கூறியதுதான் எம்மை புருவம் உயர்த்தச் செய்தது.
ஹாங்காங்கில் நீண்ட நாள் புற்று நோயால் அவதியுற்ற ஒரு நடுத்தர வயதுடைய மாது அலோபதியை ஓரங்கட்டி இயற்கை முறைகளை இணையத்தில் கற்றறிந்து வாழ்வில் செயல்படுத்தி வந்ததன் பயனாய் புற்றை இருந்த இடம் தெரியாமல் தம் உடலிலிருந்து விரட்டியடித்ததை அவன் கூறியது ஆச்சரியமூட்டியது.
அதுவும் இரவு உறங்க வேண்டிய நேரம் என்பதையும் அந்நேரத்தில் மின்விளக்குகளை வீடுகளில் ஒளிரச்செய்து நீண்ட நேரம் விழித்திருப்பதையும் பகலில் சூரியன் உதயமாகி பொட்டில் அறைந்தார் போல் சூடேற்றிய பின் விழிப்பதையும் முதலில் அம்மாது மாற்றியதையும் மேலும் நடுநிசிக்குப் பின் (தஹஜ்ஜத் நேரம்) விழித்தெழுந்து வீட்டு ஜன்னல் வழியாக வெளியே இலவசமாக அந்நேரத்தில் கொட்டும் ஒசோன் காற்றை இழுத்து சுவாசித்தத்தையும் அத்துடன் முற்றிலும் இயற்கை சார்ந்த உணவு முறைக்குத் தன்னை மாற்றிக் கொண்டதையும் அதன் பின்னர் தான் புற்றுநோய் இல்லாதொழிந்தத்தையும் அம்மாது கூறியதை அவன் தெரிவித்தபோது கட்டுரையாளர் தம்பி சாலிஹ் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வந்தது.
நாம் பின்பற்றும் மார்க்கம் அன்றாட வாழ்வியல் நெறிமுறைகளை சிறப்பாகக் கற்றுத்தந்திருந்தும் அவற்றை உதறி உதாசீனப்படுத்திவிட்டு மதிப்பிற்குரிய ஹீளர் பாஸ்கர் போன்றோர்தான் அதனை நமக்குச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும் எனும் நிலையை யாரிடம் சொல்வது?
ஹீளர் பாஸ்கர் அவர்களின் 6 மணி நேரம் தொடர்ந்து கேட்கவேண்டிய குறுந்தகடை என் மதிப்பிற்குரிய நண்பர் ஒருவர் மூன்று வருடம் முன்பு எனக்கு வழங்கினார். மேலும் அப்போது நாங்களிருவரும் எங்கள் குடும்பத்தவரோடு சென்னைக்கு காரில் போகும் போது அதில் பெரும் பகுதியை கேட்டு முடித்தோம்.
ருஜூ' இலல்லாஹ் (அல்லாஹ்வின் பால் மீள்வது) தான் நம் உடலில் உள்ள அத்தனை நோய்க்கும் தீர்வு தரும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்வோமாக.
இக்கட்டுரை பயனுள்ள பல கருத்துக்களை விவரித்துள்ளது.
பாசமிகு என் தம்பி சாலிஹுக்கு நன்றிகள் பல.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross