எல்லோருக்கும் உதவியாளர்... posted byS.K.SALIH (Kayalpatnam)[12 February 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 39218
தான் உண்டு; தன் பணியுண்டு என்று வாழ்ந்தவர்கள்...
சுயநலம் நிறைந்த இக்காலத்திலும் - நண்பர் அபூதாஹிர் ஆலிம் அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல - தன் உற்றார், உறவினர் வீடுகளுக்கெல்லாம் சென்று, “கடையில் என்ன சாமான் வாங்கி வர வேண்டும்?” என்று அடம்பிடித்து, வேலையைச் செய்து கொடுத்து இன்பம் கண்டவர்.
அதிகாலை ஃபஜ்ர் வேளையை அடைந்துவிட்டோம் என்பதை, பள்ளிவாசல்களின் பாங்கொலி, சேவல்களின் கூவல், செய்து ஹுஸைன் மாமாவின் கடைவீதி தரிசனம் ஆகியவற்றைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.
கருணையுள்ள அல்லாஹ், மாமா அவர்களைத் தன் பக்கம் எடுத்துக்கொண்டான்.
மாமா அவர்கள், தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...
இச்செய்தியின் கீழ் கருத்து தெரிவித்துள்ள அனைவரது நற்சான்றிதழ்களையும் வஸீலாவாக்கி, அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறை, மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைப்பானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - என் பாசத்திற்குரிய குளம் ஷேக் அப்துல் காதிர் காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross