துஆ செய்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! posted bySHEIKH ABDUL QADER (Kayalpatnam)[13 February 2015] IP: 180.*.*.* India | Comment Reference Number: 39247
எங்கள் அன்புத் தந்தை அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். இச்செய்தியின் கீழான தங்கள் யாவரின் மேலான துஆக்களுடன் கூடிய இரங்கல் கருத்துக்கள் - வேதனையுற்றிருந்த எம் நெஞ்சங்களுக்கு அருமருந்தாக அமைந்துவிட்டது. அதற்காக, தங்கள் யாவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் என்றென்றும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
எங்கள் அன்புத் தந்தை தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.
அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், அவர்களது மகனாக நான் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். தயவுகூர்ந்து தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
இறைவன்மிகப்பெரியவன்.
மனமார்ந்த துஆக்களுடன்,
இறையடிமை செ.ஹு.ஷெய்கு அப்துல் காதிர்
(தொடர்பு எண்: +91 73731 43031)
மற்றும் சகோதரியர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross