Re:...ஒவ்வொரு அரசியல் தலைவரும் பின்பற்ற வேண்டிய அழகிய முன்மாதிரி posted bymackie noohuthambi (colombo)[15 February 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39257
அற்புதமான பேருரை. இந்த சிறிய வயதில் எவ்வளவு இறை நம்பிக்கை, எவ்வளவு பண்பு பணிவு......பதவி ஏற்றவுடன் இந்த நாட்டின் பிரதம அமைச்சரோ ஜனாதிபதியோ எந்த மாநில முதலமைச்சரோ பேசாத அற்புதமான உரை.
இதை நமது நகர்மன்ற தலைவி முதல் புரட்சி தலைவி என்றழைக்கப்பட்டு இப்போது மக்களின் முதல்வர் என்று அழைக்கப்படும் ஜெயலலிதா - தமிழின தலைவர் என்று அழைக்கப் பட்டு இப்போது சாதாரணமாக கலைஞர் என்று அழைக்கப் படும் கருணாநிதி - பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் தலைவர் என்று அழைக்கப் பட்டு இப்போது சாதாரணமாக அழைக்கப் படும் மன்மோகன் சிங் - KING MAKER என்று சில நாட்களுக்கு முன் அழைக்கப் பட்டு இன்று சாதாரண ஒரு மனிதராக மாறி கூனி குறுகி போய் நிற்கும் அமீத் ஷா - இலங்கையில் 10 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த வானளாவிய அதிகாரம் கொண்டிருந்து இன்று சாதாரண மனிதனாக யாரும் கண்டு கொள்ளப் படாத மனிதராக ஆகிவிட்ட மஹிந்த ராஜபக்சே - இவர்கள் எல்லோரும் எண்ணி பார்க்க வேண்டும்.
நரேந்திர மோடி அவர்களை நேரில் சென்று அழைத்தும் அவர் கலந்து கொள்ள மறுத்தது அவருடைய அரசியல் முதிர்ச்சி இன்மையையும் கெஜ்ரிவாலின் பெருந்தன்மையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
அல்லாஹ்வின் திருமறை வசனம் எவ்வளவு சத்தியமானது என்பதை நினைத்துப் பார்க்கிறேன். அவன் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரங்களை கொடுப்பான் அவன் நாடியவர்களிடமிருந்து அதை பிடுங்கி கொள்வான் - அவன் நாடியவர்களை கண்ணியப் படுத்துவான் அவன் நாடியவர்களை இழிவு படுத்துவான். எல்லா பொருள்களின் மீதும் அவனே ஆதிக்கம் செலுத்துவான் என்ற கருத்துக்கள் அடங்கிய திருமறை வசனத்தை அர்விந்த் கேஜ்ரிவால் ஓதி இருக்கிறாரோ என்னவோ, முற்றிலும் ஒரு ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் பேசும் பேச்சாகவே இது அமைந்துள்ளது .
சிகாகோவில் விவேகானந்தர் பேசிய பேச்சுக்கள்,வட்ட மேஜை மகா நாட்டில் மகாத்மா காந்தி பேசிய பேச்சுக்கள் இந்திய சுதந்திரத்தின் போது ஜவஹர்லால் நேரு பேசிய பேச்சுக்கள் - செங்கோட்டையில் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்கள் இவை எல்லாம் சரித்திரத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் 42 வயதே ஆன கேஜ்ரிவாலின் பேச்சு மூலம் இந்த உலகமே அவரை திரும்பி பார்க்க செய்திருக்கிறார்.உலக தலைவர்களின் வரிசையில் உயர்ந்த இடத்துக்கு வந்து நிற்கிறார். இளைஞர்களால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார்.
YAA MAUSHARA SHABAAB என்று நபிகள் நாயகம் இளைஞர்களைத்தான் அழைத்தார்கள். 100 இளைஞர்களை தாருங்கள் அவர்கள் இந்த நாட்டின் சிற்பிகளாக்கி காட்டுகிறேன் என்று விவேகானந்தர் சொன்னார்.
கேஜ்ரிவால் சொல்வது யாவும் செயல்படுத்த 5 ஆண்டுகள் போதுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஊழல்களாலும் லஞ்சங்களாலும் தினசரி அபிஷேகம் செய்யப்படும் ஒரு நாட்டில் அதை செய்ய நாளாகலாம். ஆனால் டில்லியை மட்டும் சுத்தப் படுத்துவேன் என்று அவர் சொல்வது நம்பிக்கை அளிக்கிறது. அவரது உயரம் அவருக்கு தெரிகிறது. அவரது அந்தஸ்து அவருக்கு புரிகிறது. டில்லி மக்களின் ஆதங்கம் அவருக்கு தெரிகிறது. .எனவே அவர் சாதிப்பார். புரட்சிகள் செய்வார்.
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் - துணிவு வரவேண்டும் தோழா..
பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா...
அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை-
உலகே ஒரு கோயில் - ஒன்றே உன் தெய்வம்...
என்ற பாடல் வரிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் பேச்சு இவரின் உரையில் தொனிக்கிறது.
நம்பிக்கையுடன் அவருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross