Re:... posted byJaved Nazeem (Chennai)[16 February 2015] IP: 115.*.*.* India | Comment Reference Number: 39275
இந்தக் கட்டுரை: நேற்றிரவு தான் முழுமையாக படித்து முடித்தேன். முன்னர் வெளியான இந்தக் (goo.gl/ksC06h) கட்டுரையின் தொடர்ச்சி என்று குறிப்பிடலாம். அதன் முடிவுப் பகுதியில் இது துவங்குகிறது.
நிறைய பதில் பதிவுகளை எதிர் பார்த்தேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் இருந்தும், குறைவான கருத்துக்களே உள்ளன - சிந்தித்துப் பார்க்கையில், உடல் நலம் பற்றிய அக்கறை நம் அனைவரிடமுமே சிறிது குறைவாக இருப்பதை உணர முடிகிறது. ஏதேனும் நோய் ஏற்பட்டு அது முற்றிய பிறகு (இறைவன் காக்க வேண்டும்), இவற்றை எல்லாம் நாம் அப்போதே செய்திருக்கலாமோ என்று தோன்றும். நல்ல நேரம் இப்போது தான் - இப்போதே ஆரம்பித்து விடுங்கள்.
சாலிஹ்: நல்ல விஷயங்களை தேடிச் சென்றறிந்து, பின்பற்றுவதோடு மட்டுமல்லாது அவற்றை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்கிற ரீதியிலான உனது சொல்லும் செயலும், இறைவனிடம் நற்கூலிகளைப் பெற்றுத் தரும், இன்ஷா அல்லாஹ்.
"மரங்களைக் கண்டுவிட்டால், சிறிது நேரம் வண்டியை நிறுத்தி அங்கே அமர்ந்துவிட்டோ, சிறிது படுத்துறங்கிவிட்டோ வருவேன்". கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன், மதுரை முத்துச்சாவடியில் எதிர்பாராத சூழ்நிலையில் சில நாட்கள் நாமெல்லாம் தங்கி இருந்தது நினைவில் வந்து சென்றது. சந்தோஷத்தை அளவீடாக கொண்டு செல்வத்தை கணக்கிட்டால், உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் நீ இருப்பாய் என்று உறுதியாக சொல்லலாம்.
(மேலோட்டமாக பார்த்து முன்னர் கருத்து பதிந்தமையால், KCGC சுற்றுலா நிகழ்வு பற்றி குறிப்பிடப் பட்டிருந்ததை கவனிக்காமல் என்னுடைய பதிவிலும் குறிப்பிட்டு விட்டேன்.)
ஷுஐப் காக்கா: உங்கள் பதிவு வருத்தமளிக்கிறது. ஆள விடுங்கப்பா நமக்கெல்லாம் சரிப்பட்டு வராது என்கிற தொனியில் உள்ளது. அட்டடயத்துல* ரெண்டு காலையும் தூக்க வேண்டாம், அந்தர் பல்டி அடிக்க வேண்டாம், அஞ்சு மணிக்கு எழுந்து ஆறு ரவுண்டு ஓட வேண்டாம். அறுசுவை உணவைத் தவிர்க்கவும் வேண்டாம், மாறாக புசிக்க வேண்டும், அதில் சில எளிய பக்குவங்களைப் பேண வேண்டும். என்ன கஷ்டம் கண்டீர்கள் இதில்?
உடம்பும் உடல் நலமும் இறைவனின் அமானிதம். அதைக் காப்பது நமது கடமை. மேலும் உங்கள் எழுத்துக்களும், கருத்துக்களும் எங்களுக்குத் தேவை. நீங்கள் உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும். தயவு செய்து முயற்சிக்கவும். (ஷுஐப் காக்கா இந்த முறைகளைப் பின்பற்றி அவர்கள் பாணியில் ஒரு சுவையான கட்டுரை கிடைக்க சாலிஹ், பஷீர், முஜாஹித் போன்றவர்கள் முயற்சிக்குமாறு வேண்டுகிறேன்)
புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் "நான் நம்மாழ்வார் பேசுகிறேன்", மற்றும் "ஜன்னலில் ஒரு சிறுமி" ஆகியவை அடங்கும். இரண்டாம் புத்தகத்தை உங்கள் விமர்சனம் மூலம் அறிந்து கொண்டேன். நன்றிகள் பல. இதை ஒரு பள்ளிக்கூட நிர்வாகிக்கும் பரிசளிக்க உள்ளேன் இன்ஷா அல்லாஹ்.
* இது என்ன புது வார்த்தை என்று எண்ண வேண்டாம். அட்டடயத்துல = at a time = at the same time = ஒரே நேரத்தில் :). யோகா கிளாசில் இருந்து பாதியில் சென்று விட்ட ஒரு colleague சொன்னது - "இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது, அட்டடயத்துல ரெண்டு காலையும் தூக்க சொல்றாங்க". யோகாவை குறை கூறவில்லை, அதிலும் நிறைய நன்மைகள் இருக்கின்றன - ஒரு நகைச்சுவைக்காக அதை பயன் படுத்திக் கொண்டேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross