ஒரு புரிதல்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[16 February 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39280
தம்பி சலீம் அறிவது,என்னைப்பொறுத்தவரை DCW வைப்பற்றி எந்த செய்தியைப்படித்தாலும் வயிறு பற்றிக்கொண்டு வருகிறது. இது பொறாமை உணர்வல்ல, பாதிக்கப்பட்டவரின் "பதுவா" உணர்வு!
அதே உணர்வில்தான் தாங்களும் இருப்பீர்கள் என்று நானும் நினைக்கிறேன்.என் நினைப்பு சரி என்ற நம்பிக்கையில்,
அந்த ஆலையைப்பற்றிய செய்திகளை ஊடகங்கள் தங்கள் ஊடகப்பணிகளில் ஒன்றாக செய்கிறதே தவிர,அந்த நச்சு ஆலைக்கு அணுவளவும் இந்த இணயதளம் இறங்கிவந்து ஒருசேர வாய்ப்பில்லை என்பதே என் வழுவான நம்பிக்கை!
ஏனெனில்,அந்த நச்சு ஆலைக்கெதிராக தொடுத்துவரும்
கருத்துப்போராக இருக்கட்டும்,களப்போராக இருக்கட்டும், எல்லா உணர்வுகளையும் இயல்பைவிட மேலாக மிகைப்படுத்தி, அதில் தங்களின் தீராத எதிர்ப்புத் தன்மையையும், இலைமறைக்காயாக புதைத்து பிரசுரிப்பவர்கள் இந்த இணயதளத்தார்கள் என்றால்,
அது மிகைபடுத்துதல்ல என்னைப்பொறுத்தவரை!
ஆகவே, கேவலம் அந்த நச்சு ஆலைபோடும் எலும்புத் துண்டுக்கு நாக்கை நீட்டிக்கொண்டு, நம்மூருக்கும்,அந்த நச்சு ஆலையின் பாதிப்பினால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் தீராத் துயரிலுள்ள நம் மக்களுக்கும் துரோகம் செய்யும் சில மலமுண்ணும் மனித மிருகங்களின் மெல்லிய சுயநல சுவாசக்காற்றுகூட தங்கள் மீது தீண்டாத அளவிற்கு பக்குவமாய் தங்கள் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, அவர்களோடு சில நடப்புகளை நெருங்கி உள் நோக்குபவர்களில் நானும் ஒருவன் என்ற நம்பிக்கையில் இக்கருத்தை பதிக்கின்றேன்.
இதையும் மிஞ்சி ஏதேனும் நடந்தால், அவைகளை அவதானிக்கும் அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross