செய்தி: ஒரு வழிப்பாதையில் இடையுறாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றிட நடவடிக்கை கோரி, இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[21 February 2015] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39311
நகர் நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.
இதில் என்ன கொடுமை என்றால், ஒரு சுன்னத்தான நபி வழியை பின்பற்ற காவல் துறையை நாடவேண்டியது உள்ளது என்பது தான். மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, பாதசாரிகளுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்கள் நபி வழி.
ஹதீஸ் முஸ்லிம்
5106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக்கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம் (பாதசாரி)களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்" என்று கூறி(விட்டு அதை அப்புறப்படுத்தி)னார். இதன் காரணமாக, அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
5107. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நடுவழியில் கிடந்து மக்களுக்கு இடையூறு அளித்துவந்த மரமொன்றை வெட்டி (அப்புறப்படுத்தி)யதற்காகச் சொர்க்கத்தில் நடமாடுவதை நான் கண்டேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆக சகோதரர்களே இந்த விசயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்.
YUF சகோதரர்களுக்கு, ஒரு மனு அனுப்பும் போது கொஞ்சம் சரியாக எழுதி அனுப்புங்கள். நீங்கள் ஒரு தனி மனிதர் அல்ல, ஒரு இயக்கம்.
DSP என்பவர் கண்காணிப்பாளர் அல்ல,அவர் துணை கண்காணிப்பாளர்.
கண்காணிப்பாளருக்கு -இந்த மூன்று சுழி 'ணி' தான். ( ஒரு இடத்தில் மட்டும் சரியாக போட்டுள்ளீர்கள்)
கூடவே பெரியார் "லை, ளை,' எல்லாம் புழக்கத்தில் வந்து பலமாமங்கம் ஆகிவிட்டன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross