காயல்பட்டினம் நகரில் அமைந்துள்ள ஒரு வழிப்பாதையில், போக்குவரத்திற்கு இடையுறாக - நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்றிட கோரி இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் மனு - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த மனுவின் நகல் வருமாறு:
இளைஞர் ஐக்கிய முன்னணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[21 February 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39307
அழைக்கும் அலைக்கும்
நமது '' இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ''' நம் காவல் துறை அதிகாரிகளிடம் கொடுக்க பட்டு உள்ள இந்த மனு....மீதான நடவடிக்கைகளை மிகவும் துரிதமாகவே நம் காவல் துறை ...மிகவும் '' கண்ணுற்று நடவடிக்கை எடுத்தால் நல்லதே ....
நம் காவல் துறையின் இந்த மிக துரிதமான நடவடிக்கையால் ...இப்பகுதியில் வாகன நெருக்கடிகள் & விபத்துக்களும் கண்டிப்பாகவே தவிர்க்க படலாம் .....பொது மக்களின் கஷ்டங்களும் சரி ....போக்குவரத்துக்களும் மிக சீராகவே இருக்கும் ....
மிக முக்கியமானது இப்பகுதியில் மக்கள் நெருக்கடியான பகல் நேரங்களில் கடைகளின் சரக்குகள் இறக்குவது தவிக்க படலாம் .....இதனால் தான் வாகன போக்குவரத்து பாதிப்படைகிறது .....+ பல விபத்துக்கள் நடக்கின்றன .....
நம் இந்த அமைப்பினர்களின் இது போன்ற நல்ல செயல்கள் நம் ஊருக்கு தேவையே .....தொடரட்டும் தங்களின் நற் செயல்கள் ....பாராட்டுகிறோம் ...
2. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[21 February 2015] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39311
நகர் நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு பாராட்டுக்கள்.
இதில் என்ன கொடுமை என்றால், ஒரு சுன்னத்தான நபி வழியை பின்பற்ற காவல் துறையை நாடவேண்டியது உள்ளது என்பது தான். மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, பாதசாரிகளுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்கள் நபி வழி.
ஹதீஸ் முஸ்லிம்
5106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக்கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம் (பாதசாரி)களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்" என்று கூறி(விட்டு அதை அப்புறப்படுத்தி)னார். இதன் காரணமாக, அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
5107. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நடுவழியில் கிடந்து மக்களுக்கு இடையூறு அளித்துவந்த மரமொன்றை வெட்டி (அப்புறப்படுத்தி)யதற்காகச் சொர்க்கத்தில் நடமாடுவதை நான் கண்டேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆக சகோதரர்களே இந்த விசயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள்.
YUF சகோதரர்களுக்கு, ஒரு மனு அனுப்பும் போது கொஞ்சம் சரியாக எழுதி அனுப்புங்கள். நீங்கள் ஒரு தனி மனிதர் அல்ல, ஒரு இயக்கம்.
DSP என்பவர் கண்காணிப்பாளர் அல்ல,அவர் துணை கண்காணிப்பாளர்.
கண்காணிப்பாளருக்கு -இந்த மூன்று சுழி 'ணி' தான். ( ஒரு இடத்தில் மட்டும் சரியாக போட்டுள்ளீர்கள்)
கூடவே பெரியார் "லை, ளை,' எல்லாம் புழக்கத்தில் வந்து பலமாமங்கம் ஆகிவிட்டன.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross