காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தால் KCGC Bulletin என்ற பெயரில் வெளியிடப்பட்டு வரும் செய்தி மடலைப் பரவலாக வினியோகித்து, பொதுமக்களைப் பயனடையச் செய்திட, அதன் செயற்குழுவில் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC)-ன் மூன்றாவது ஆண்டு பொதுக் கூட்டம் (AGM) சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள கிரீம்ஸ் துகார் பில்டிங்-இல் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ், ஐந்தாவது தளத்தில் கடந்த பிப்ரவரி 15 (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்றது.
எம்.எச்.நூஹ் இம்ரான் புனித இறைமறை வசனங்கள் ஓதி இக்கூட்டத்தை துவக்கி வைத்தார்.
துணைத்தலைவர் ஸ்மார்ட் எம்.எஸ். அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைவர் ஆடிட்டர் எஸ்.எஸ்.அஹ்மத் ரிஃபாய் KCGCயின் துவக்கம் மற்றும் நடப்பாண்டின் நிகழ்வுகளை விளக்கி தலைமையுரை ஆற்றினார்.
KCGC உருவாக்கப்பட்டடதன் நோக்கம், அவசியம், அதன் கடந்த மற்றும் நடப்பாண்டு செயல்பாடுகள் குறித்து முழுமையான ஆண்டறிக்கையை அதன் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் கூட்டத்தில் சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார்.
அமைப்பின் 2013-2014 மற்றும் 2014-2015 (பிப்ரவரி-15 வரையுள்ள) வரவு-செலவு கணக்கு, தற்போதைய நிதி இருப்பு கொண்ட முழுமையான நிதி நிலை அறிக்கையினை KCGC-ன் பொருளாளர் குளம் முஹம்மத் தம்பி கூட்டத்தில் சமர்ப்பித்து, ஒப்புதலைப் பெற்றார்.
KCGCயில் தற்போது செயற்குழு உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டது. மேலும் அதில் சில மாற்றங்கள் கொண்டுவர கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆண்டு பொதுக்கூட்டத்தின் வழமையான நிகழ்வுகளுக்குப் பிறகு நிகழ்வில் பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கிடையே பொது கருத்து பரிமாற்றம் நடத்தவும், KCGCயின் எதிர்காலத் திட்டங்கள், வளர்ச்சிப் பாதையில் அது செல்வதற்கான ஆலோசனைகளை வழங்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, உறுப்பினர் கே.கே.எஸ்.சாலிஹ் கருத்துரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-
KCGCயின் ஒராண்டுக்கான செயல்பாடுகளை முன்னமே தீர்மானித்து / வடிவமைத்து செயல்படும் போது நமது பணிகள் ஒரே சீராக செல்ல வாய்ப்பாக இருக்கும்.
சென்னையில் இயங்கும் முஸ்லிம் நிர்வாகத்தின் கல்லூரிகள் மற்றும் இன்னபிற கல்லூரிகளில் நமது பிரதிநிதியாக யாரையேனும் ஒரு மாணவரை நியமிக்க வேண்டும். அதன் மூலம் பல நன்மைகளை அடையலாம்.
நமது KCGC BULLETIN இதழை தமிழ் நாடு முழுவதுமுள்ள இஸ்லாமிய கல்லூரிகள், இஸ்லாமிய அமைப்புகளுக்கு விநியோகிப்பதன் மூலம் பல நன்மைகளை பெறாலம். சென்னை மண்ணடியிலுள்ள முக்கிய இடங்களுக்கு ஆரம்பமாக 100 பிரதிகளை விநியோகம் செய்ய நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூற, இவ்விஷயத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றுவதாக முஹம்மத் முக்தார் உறுதியளித்தார்.
நிறைவாக, KCGCயின் துணைச் செயலாளர் பி.ஏ.கே முஹம்மத் சுலைமான் - பல பணிகளுக்கிடையிலும் இந்நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து கலந்துகொண்ட அனைத்து சகோதர நெஞ்சங்களுக்கும் நன்றி கூற, துஆ கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. KCGCயின் துணை செயலாளர் முஹம்மது முக்தார் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். கலைவதற்கு முன் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர், லுஹர் தொழுகை ஜமாஅத்துடன் நிறைவேற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறப்பட்டது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KCGCயின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |