சமீபத்தில் பெய்த பருவ மழையை தொடர்ந்து அமைக்கப்பட்ட காயல் மழை, வெள்ள நிவாரண குழு மூலம் வீடுகளை புனரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
நமதூரில் அண்மையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் செய்த தன்னார்வ, பொதுநல, தனி நபர்கள்
இணைந்து ஏற்படுத்தி செயல் பட்டு வருகின்ற அமைப்பே காயல் மழை, வெள்ள நிவாரண குழு என்பதை தாங்கள் அறிவீர்கள்.
இதன் முதற்கட்டமாக 28/1/2015 புதன் கிழமையன்று பணிகளின் துவக்க விழா சுலைமான் நகரில் (மாட்டுக்குளம்) ஊர் பிரமுகர்கள் முன்னிலையில்
நடைப்பெற்றது.
இதுவரை பெறப்பட்ட 43 மனுக்களிள் தகுதியுடைய 20 மனுக்களை ஆய்வுகுழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் 15 மனுக்கள் குடிசை
மாற்று திட்டத்திலும், 05 பராமரிப்பு பணிகளில் அடங்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட குடிசை மாற்று, பராமரிப்புக்கு ஆகும் மொத்த செலவு சுமாராக ரூபாய். 9,50,000/-, இதுவரை நம் அமைப்பிற்கு
நன்கொடையாக ரூபாய் 1,61,200/- பெறப்பட்டுள்ளது. இன்னும் காயல் நல மன்றங்கள், காயல் பிரமுகர்கள் ரூபாய் 2,05,000/- தருவதாக
வாக்களித்துள்ளனர்.
எனவே முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மனுதாரரிலிருந்து, நமது விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து ஆவணங்களையும், சமர்பித்துள்ள
11 மனுதாரர்களின் வீட்டு வேலையை ஆரம்பிப்பதென முடிவு செய்யப்பட்டது. இதில் தனி நபர் ஒருவர் தன் விருப்பத்திற்கேற்றப்படி ஒரு வீட்டை
கட்டி கொடுப்பதென வாக்களித்துள்ளார். மீதம் உள்ள 10 வீடுகளுக்கு ஆகும் செலவு ரூபாய் 4,00,000/- என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இரண்டாவது கட்டமாக இதுவரை ஆவணங்களை சமர்பிக்காத எஞ்சிய 9 வீடுகளை போதிய அளவு நிதிகள் கிடைத்த பிறகு ஆரம்பிப்பதென
முடிவு செய்யப்பட்டது.
தங்களது நன்கொடைகளை பொருளாளர். K.அப்துல் ரஹ்மான் அவர்களிடம் (I.O.B. A/c 049101000018919) வழங்கி விரைவில் இத்திட்டத்தை
நிறைவேற்ற ஒத்துழைக்கும் படி இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
முதல் வீடு சுலைமான் நகரில் பணி நிறைவு விழா 05/2/2015 வியாழன் கிழமையன்று காலை 9.30 மணியளவில் ஊர் பெரியோர்கள், பிரமுகர்கள்
முன்னிலையில் நடைப்பெற்றது. எனவே நிதி பற்றாக்குறையை சமாளித்து தொய்வின்றி தொடர நிதி ஆதாரங்களை பெருக்கி மீதமுள்ள வீடுகளை
கட்டி முடிக்க தங்கள் மேலான ஆதரவுகளை எதிர்நோக்கியுள்ளோம்.
இன்று வரை நான்கு வீடுகளின் பராமரிப்பு வேலைகள் முடிவுற்றுள்ளது. முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்ட 11 வீடுகளில் மீதியுள்ள 7 வீடுகளில்
முதல் வீட்டு வேலைகள் நேற்று வெள்ளிக்கிழமை (20/2/15) தொடங்கப்பட்டது; இன்ஷா அல்லாஹ் விரைவில் பாக்கியுள்ள 6 வீட்டு வேலைகள்
ஆரம்பிக்கப்படும்.
(நிலத்தடி நீர் மேல் மட்டத்தில் இருப்பதால் வானக்குழி தோண்ட தாமதமாகிறது)
வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் ஈருலக நற்பாக்கியங்களையும்; ஸலாமத்தையும் தந்தருள்வானாக ஆமீன், ஆமீன், யாரப்பில்
ஆலமீன்.
மேலும் விபரங்களுக்கு:-
தலைவர் - அல் ஹாஜ். M.L. சேக்னா லெப்பை +91 8903 680650
செயலாளர் - அல் ஹாஜ் டூட்டி சுகரவர்தி +91 9789415765
பொருளாளர் - K.அப்துல் ரஹ்மான் +91 9790135272
நிர்வாக குழு உறுப்பினர் - அல்ஹாஜ்.புஹாரி +91 9443787964
நிர்வாக குழு உறுப்பினர் - ஜப்பான்.சேக் சுலைமான் +91 9042869396
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கண்டி சிராஜுத்தீன் நிஜார்,
ஒருங்கிணைப்பாளர், காயல் மழை, வெள்ள நிவாரண குழு. |