| |
செய்தி எண் (ID #) 15468 | | | சனி, பிப்ரவரி 21, 2015 | நாளை (பிப்ரவரி 22) போலியோ சொட்டு மருந்து தினம்: காயல்பட்டினத்தில் 14 முகாம்கள்! மாநிலம் முழுவதும் 43,051 முகாம்கள்! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 2758 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
தமிழ் நாடு முழுவதும் இளம்பிள்ளை வாதநோய் தடுப்பு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கான முகாம்கள் 18.01.2015 மற்றும் 22.02.2015 தேதிகளில் நடைபெறவுள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
முதல் கட்டமாக ஜனவரி 18 அன்று நடந்த முகாமில், 3239 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - நகரில் அமைக்கப்பட்டிருந்த 14 முகாம்களில் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக நாளை (பிப்ரவரி 22) இம்முகாம்கள் மீண்டும் நடைபெறும்.
காயல்பட்டினத்தில் முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
(1) அரசு மருத்துவமனை
(2) அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம்
(3) பெண்கள் தைக்கா (கோமான் மேல தெரு)
(4) ஒய்.யு.எப்ஃ. சங்கம்
(5) பஞ்சாயத்து யூனியன் பள்ளி (தீவுத் தெரு)
(6) எல்.கே. மேல்நிலைப் பள்ளி
(7) ரெட் ஸ்டார் சங்கம்
(8) காயிதேமில்லத் சங்கம்
(9) ஓடக்கரை சத்துணவு மையம்
(10) பஞ்சாயத்து யூனியன் பள்ளி (கே.டி.எம். தெரு)
(11) துணை சுகாதார நிலையம் (கீழலெட்சுமிபுரம்)
(12) சத்துணவு மையம் (கடையக்குடி)
(13) ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளி
(14) கற்புடையார் பள்ளி வட்டம் (கடையக்குடி) தேவாலையம்
இம்முகாம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் 22-2-2015 அன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ் நாட்டில் 43,051 சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்/அரசு மருத்துவமனைகள்/அங்கன்வாடி மையங்கள்/சத்துணவு மையங்கள்/பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
1. சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
2. அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் இரண்டாவது தவணை 22-2-2015 (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.
4. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் (NEW BORNS) முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
5. சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு விரலில் மை வைக்கப்படுகிறது. இது விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய உதவுகிறது.
6. முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
7. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
பயணம் மேற்கொள்ளும் மற்றும் தொலைதுhர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு:
தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் 1652 நகரும் மையங்கள் (Transit booth) நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1000 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை துhரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட
உள்ளது.
சொட்டு மருந்து முகாமில் ஈடுபடும் பணியாளர்கள் 22-02-2015 அன்று போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட
சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள். ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.
தமிழ் நாடு போலியோ இல்லாத 11- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியின் விளைவாக, போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்றதால், தமிழ் நாடு பல ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். இத்தருணத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் முக்கியத்துவத்தை அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் விளம்பரம் செய்ய வேண்டும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“இந்த பூமியிலிருந்து போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்”
ஜெ. ராதாகிருஷ்ணன்,
அரசுச் செயலர்.
|
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|