இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர்களுள் ஒருவரான - காயல்பட்டினத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீயின் பல்லாண்டு கால சமூக நலப் பணிகளைப் பாராட்டி, தஞ்சை மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் இம்மாதம் 22ஆம் நாளன்று நடத்தப்பட்ட “உலகை உய்விக்க வந்த உத்தம நபி ரசூல்” மீலாத் விழாவில், “சிராஜுல் மில்லத் விருது” வழங்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், 40 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் ஷைகுல் ஹதீஸ் மவ்லவீ ஏ.இ.எம்.அப்துர்ரஹ்மான் நூரீ வாழ்த்துரை வழங்கினார்.
“சிராஜுல் மில்லத் விருது” பெற்ற 40 பேருள் தஞ்சை மாவட்டம் தவிர்த்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நால்வருள் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுபெற்றுத் திரும்புகையில், இராமநாதபுரத்தில் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ,ஷாஜஹான், தமிழக அரசின் இராமநாதபுரம் மாவட்ட காழீ மவ்லவீ காதர் பக்ஷ் ஹுஸைன் ஸித்தீக்கீ ஆகியோர் சந்தித்து வாழ்த்தினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர நிர்வாகிகளுள் ஒருவரான எம்.இசட்.ஸித்தீக் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |