காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில், பட்டப்பகலில் அடையாளம் தெரியாதோரால் நடத்தப்பட்ட கத்திக்குத்தில், ஒருவர் பலியானார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில், நகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. அவற்றுள் கலைச்செல்வி பத்திரம் எழுதும் நிறுவனமும் ஒன்று. கலைச்செல்வியின் கணவர் சிவபெருமாள் இன்று காலை 10.40 மணியளவில் கடையைத் திறந்தபோது, மோட்டார் பைக்கில் வந்த இருவர் திடீரென கடைக்குள் புகந்து, சிவபெருமாளை சரமாரியாக வெட்டியுள்ளனர். உயிரைக் காப்பாற்றுவதற்காக அங்கிருந்து தப்பித்து அருகிலுள்ள கடைக்குள் அவர் புகுந்தபோது, அவ்விருவரும் அவரைப் பின்தொடர்ந்து சென்று மீண்டும் வெட்டியுள்ளனர். இதில் அவர் இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்துள்ளார்.
உடனடியாக திருச்செந்தூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், வழியிலேயே இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து நிகழ்விடம் விரைந்து வந்த ஆறுமுகநேரி காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு காரணமாக, பேருந்து நிலைய வளாகம் பரபரப்புடன் காணப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட சிவபெருமாள் தன் மனைவி கலைச்செல்வி மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட படம்:-
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
கூடுதல் படங்கள்:
A.S.புகாரீ
‘நோனா’ உவைஸ்
[கூடுதல் தகவல்களும், படங்களும் இணைக்கப்பட்டன @ 13:05 / 24.02.2015]
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 13:15 / 24.02.2015]
[ஒரு படம் தவிர்க்கப்பட்டது @ 13:41 / 24.02.2015]
[ஒரு படம் இணைக்கப்பட்டது @ 12:14 / 05.03.2015] |