சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில், நடப்பு 2014-2015 கல்வியாண்டில் - சிறந்த சிறப்புத் தகுதி மதிப்பெண்கள் (கட்-ஆஃப்) பெறுவோருக்கான பரிசுகள் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:-
+2 தேர்வு எழுத இருக்கும் மாணவ கண்மணிகளே, நீங்கள் மருத்துவர் அல்லது பொறியாளர் ஆக கனவு காண்கின்றீர்களா?
கீழே தரப்பட்டுள்ள விபரங்களை நன்கு படித்து அதன்படி சரியான முறையில் நடந்தால் நீங்களும் மெரிட் மூலம் எளிதாக மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆகலாம்.
கடந்த 2012-13 ம் வருடம் ரியாத் காயல் நல மன்றம், கட்ஆப் மதிப்பெண் 180 ற்கு மேல் எடுத்த 30 மாணவர்களுக்கு Rs.36,500, மற்றும் 2013-14ம் வருடம் 36 மாணவர்களுக்கு Rs.41,500ம் பரிசாக பகிர்ந்தளித்தது,.அல்ஹம்துலில்லாஹ். இன்ஷா அல்லாஹ், இந்த வருடமும் அதை போன்று பரிசுகள் வழங்க நாடியுள்ளோம். பரிசுத்தொகை மற்றும் கட் ஆப் மதிப்பெண் விபரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரே மாணவன் மருத்துவம் மற்றும் பொறியியல் என இரண்டு துறையிலும் பரிசுக்குரியவராக இருந்தால், எந்த துறையில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ அதற்குரிய பரிசு தொகை வழங்கப்படும்.
உயிரியல், இயற்பியல், வேதியல் பாடங்களில் முழுமையாக 150 மதிப்பெண்கள் பெறுவதற்கு குறிப்புகள்:
>> மொத்தமுள்ள 3 மணி நேரங்களை கீழ்க்கண்டவாறு பிரித்து கொள்ளவும்.
>> http://www.ipractice.in/12th-question-paperஎன்ற இணையதள பக்கத்தில், அனைத்து பாடங்களுக்கும் மாதிரி பரீட்சை உள்ளது. அதில் குறைந்தது 3 முறை எழுதி பயிற்சி எடுக்கவும்.
>> உங்கள் கையெழுத்து நன்றாக இருக்கும் படி பயிற்சி எடுத்து கொள்ளுங்கள்.
>> நீங்கள் வழமையாக பயன்படுத்தும் பேனாவையே கொண்டு செல்லுங்கள்.
>> ஒவ்வொரு பக்கமும் 4 பத்திக்கு மிகாமல், 24 வரிகளுக்கு மிகாமலும் பார்த்து கொள்ளுங்கள்.
>> விடைத்தாள்களில் ‘ரஃப் ஒர்க்’ வலது ஓரத்தில் செய்யாமல், கீழ் பகுதியில் செய்து பார்க்கவேண்டும். மேலும், கலர் ஸ்கெட்ச் பேனாக்களில் அடிக்கோடு இடுவதை தவிர்க்க வேண்டும்
மாணவ கண்மணிகளே, நீங்கள் நன்கு படித்து நல்ல மருத்துவராக, சிறந்த பொறியாளராக வர பிராத்திக்கின்றோம்.
வணிகவியல் பிரிவில் முதல் மூன்றிடங்களைப் பெறுவோருக்கும் பரிசுகள்:
இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் முதல் வணிகவியல் குரூப்பில் (Commerce Group) நம் நகர் அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு முறையே தலா Rs.3,000, RS.2,000, மற்றும் Rs.1,000 வீதம் வழங்கப்படும்.
வழக்குரைஞர், ஊடகவியல் பயில்வோருக்கு உதவித்தொகை:
மேலும் ஆர்வம் உள்ள ஏழ்மையான நம் நகர் மாணவர்கள் யாரேனும் வக்கீல் (Lawyer) மற்றும் ஊடகவியல் (Journalisam) பட்டப்படிப்பு படிக்க விரும்பினால் அவர்களுக்கு எம் மன்றம் தன்னால் இயன்ற நிதி உதவியை அளிக்க ஆயத்தமாக உள்ளது என்பதனையும் அறியதருகின்றோம்.
என்றும் உங்கள் முன்னேற்றத்தில்,
ரியாத் காயல் நற்பணி மன்றம், ரியாத் சவுதிஅரேபியா
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |