Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:50:51 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15482
#KOTW15482
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 24, 2015
ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 67 ஏழைப் பெண்களுக்கு நகர அதிமுக சார்பில் சேலை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3153 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நகர அதிமுக சார்பில் 67 ஏழைப் பெண்களுக்கு சேலை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாளான இன்று அக்கட்சியினர் சார்பில் மாநிலம் முழுவதும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி முனையில், இன்று காலை 10.00 மணியளவில் ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாள் விழா, கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.மெய்தீன் தலைமையில் நடைபெற்றது.





திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக செயலாளர் வடமலைப் பாண்டியன், ஜெயலலிதா பேரவை தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் ஏரல் ரமேஷ், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அதிமுக காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஆகியோர் இவ்விழாவில் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, நகரின் 67 ஏழைப் பெண்களுக்கு சேலைகளை அன்பளிப்பாக வழங்கி, உரையாற்றினர்.









முன்னதாக, காயல்பட்டினம் ஸாஹிப் அப்பா தைக்காவில் பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர், ஐசிஐசிஐ வங்கி முனையில் அதிமுக கட்சிக் கொடியேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அரசு மருத்துவமனையிலுள்ள உள்நோயாளிகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும், புரட்சி சங்கர், எம்.எல்.இல்யாஸ், ஆறுமுகநெயினார், செந்தமிழ்ச் செல்வன், நகர பொருளாளர் எம்.எஸ்.ஜின்னா, ஆதி நாராயணன், ஜெய்னம்பு, ஜெய்த்தூன், பெருமாள் பாண்டியன் உட்பட - அனைத்து வார்டு செயலாளர்கள், நகர கிளை அங்கத்தினர் கலந்துகொண்டனர். 13ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் நன்றி கூறினார்.

காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு, அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தலைமையில் ஜெயலலிதாவின் 67ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் உட்பட பலர் உரையாற்றினர்.





கட்சியின் நகரச் செயலாளர் செய்யது காஸிம், மூத்த உறுப்பினர் காயல் மவ்லானா உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தகவல் & படங்களுள் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, நகர அதிமுக சார்பில் கடந்தாண்டு நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

அதிமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 16:44 / 24.02.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by omer anas (doha,qatar) [24 February 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 39348

இதற்க்கு பெயர் லஞ்சமா,,?
நன்கொடையா ,,?
அன்பளிப்பா ?
அட,,புரிந்தவங்க சொல்லுங்கப்பா ...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [25 February 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39362

சிம்மத்தில் பிறந்தவள்…!
சிங்காரமாய் வளர்ந்தவள்…!
சிம்மாசனம் ஏறும் வரம் பெற்றவள்…!
மக்கள் சிம்மாசனத்தில் இடம் பெற்றவள்…!!

நல் ஆரோக்கியமும், நல்லோர் ஆசியும், துணையும் பெற்று நெடுநாள் வாழியவே…!!

என் தாயினும் மூத்தவளே…! என் தாயகத்தை காத்திட அவதரித்தவளே…!

உன்னை வாழ்த்தும் வயதில்லை…! பல்லாண்டு காலம் வாழ வேண்டுகிறேன்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...சிந்தித்து பார்த்து செய்கையை மாற்றுங்கள்...
posted by mackie noohuthambi (colombo) [26 February 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39378

அகவை 67 காணும் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கலை உலகில் முடிசூடா காதல் மன்னனாக வாழ்ந்து திரையுலகில் புகுந்து பின்னர் அரசியலில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்துக்கொண்டு வாழ்வின் இறுதி வரை முதலமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றிய பொன்மன செம்மல் மக்கள் திலகம் புரட்சி தலைவர் என்று மக்களால் அழைக்கப் பட்ட எம்ஜியார் அவர்களின் அரசியல் வாரிசாக – தேர்ந்தெடுக்கப்பட்டு – “திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ” என்று எம்ஜியார் பாடிய பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்து, இன்று வரை கட்சியையும் அதன் சின்னத்தையும் கொடியையும் காப்பாற்றி வரும் செல்வி ஜெயலலிதா அவர்களை வாழ்த்துகிறோம்.

எம்ஜியாரிடம் இருந்த நற்பண்புகள், பணிவு உங்களிடம் இல்லை என்பதை மன வருத்ததுடன் நினைத்துப் பார்த்து கவலைப் படுகிறேன். அதே நேரம், துணிவு, அஞ்சாமை, எந்த பிரச்சினைக்கும் தீர்வு அந்த பிரச்சினையை துணிவுடன் எதிர்கொள்வதுதான் என்ற உங்களது சிந்தனை ஓட்டத்தை பாராட்டவும் செய்கிறேன்.நெருப்பாற்றில் நீந்தி வரும் உங்கள் ஆளுமை எனக்கு உடன்பாடான ஒன்று.

“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது” என்பதும் “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்” என்பதும் வள்ளுவன் வாக்காகும். என் எதிரிகளுக்கு தோல்வியை பரிசாக கொடுத்தேன் என்று புரட்சி தலைவர் சொல்வார். நீங்களோ என்னை எதிர்ப்பவர்களை இல்லாது ஒழிப்பேன் என்று சொன்னீர்கள். இரண்டுக்கும் உள்ள வார்த்தை சித்துக்களை நினைத்துப் பார்க்கிறேன். முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகள்.

நீங்கள் வழக்குகளிலிருந்து விடுபட்டு மீண்டும் இந்த தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்ற வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன்.

ஆனாலும்

தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது.
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்

சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று. தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கொள். தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பார்த்துக் கொள்

என்று உங்கள் அரசியல் ஆசான் பாடி சென்றது உங்களுக்கு எதிர்காலத்தில் ஒரு பாடலாக அல்ல ஒரு பாடமாக அமைய வேண்டும்.

மற்றப் படி உங்கள் மக்கள் சேவைகளை பாராட்டுகிறேன். நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.வாழ்த்துவதற்கு வயதும் தேவை இல்லை வணங்கவும் தேவை இல்லை. உயர்ந்த உள்ளம் இருந்தாலே போதும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [28 February 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39383

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் மரியாதைக்குரிய தமிழக தலைவி அம்மா அவர்கள் ...நீடித்து வாழ்ந்து ..வர வல்ல இறைவனை வேண்டுகிறோம் .....

நம் தமிழக மக்களுக்கு எப்போதும் நல்லதையே நினைக்கும் நம் தலைவி அம்மா அவர்கள் ...பல்லாண்டு வாழ வாழ்த்து கிறோம் ...

தமிழக அனைத்து தொண்டர்களின் பிராத்தனை எப்போதும் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு உண்டு ....

தங்களின் நற் சேவைகள் தமிழக மக்களுக்கு எப்போதும் தேவையே .....தொடரட்டும் தங்களின் சீரிய நற் செயல்கள் .....தமிழக மக்களுக்கு .... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved