பிப்ரவரி 26 வியாழக்கிழமை அன்று, மாலை 5 மணியளவில் - காயல்பட்டினம் புதிய பேருந்து நிலைய வளாகம் அருகில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என உறுப்பினர்கள் சார்பில் - நகரில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
1. தொடரட்டும் மக்கள் தலைவியின் மக்களுக்கான பணி. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[24 February 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39323
நகரின் அணைத்து மக்களும் ரசாயன தொழிற்சாலைக்கு எதிராக போராடும் ஆலைக்கு நகராட்சியில் தலைவருக்கு தெரியாமல் முறைகேடாக ஆலையின் விரிவாக்க கட்டிடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை நகர்மன்ற கூட்டத்தில் நகரமன்ற தலைவர் அந்த கட்டிட அனுமதியை ரத்து செய்ய கோரி கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்த உத்தமர்களா..!
நீங்களா...! நகர்மன்ற தலைவருக்கு எதிராக ஆர்பாட்டம் பண்ணுகிறீர்கள்...? காலத்தின் கொடுமையடா...!
பல விதமான விண்ணப்பங்களோடு நகராட்சிக்கு வரும் நகர் பொதுமக்களிடம் நகராட்சி அலுவலர்கள் / சில புரோக்கர்கள் நடந்துகொள்ளும் முறைகேடான அணுகுமுறைகளை / நகராட்சிக்கு வரும் பொது மக்களிடம் எதிர்ப்பார்க்கும் சன்மானம் / அதனால் ஆதங்கப்படும் நகர்மக்களை திசை திருப்பும் துண்டு பிரசுரமாக இருக்கிறது..!
நகர்மன்ற தலைவரிடம் நேரில் விபரம் கேட்டேன் - சர்வே எண் 278 இல் குப்பைகளை கொட்ட நகர்மன்ற தலைவர் தடையாக இல்லை என கூறுகிறார்..! இங்கே பார்வைக்கு உள்ள துண்டு பிரசுரத்தில் அதற்க்கு மாற்றமாக உள்ளது - தானும் குழம்பி நகர்மக்களையும் குழப்பத்தில் ஆளாக்கி நகராட்சியில் வேறு விதமான குறைபாடுகளை திசை திருப்பி நகர பொது மக்கள் சிந்தனையை மங்க செய்ய முயற்சிக்கும் துண்டு பிரசுரமே இது.
நகரில் சேரும் அணைத்து குப்பைகளையும் (சர்வே எண் - 278) ஒரே இடத்தில் கொட்டி நகரை தூய்மை படுத்த பல மாதமாக முயற்சிக்கும் நகர்மன்ற தலைவருக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் / சர்வே எண் 278 இல் குப்பைகளை கொட்ட BAFFER ZONE தீர்மானத்தை நிறைவேற்றாமல் தடையாக இருக்கும் நகர்மன்ற உறுப்பினர்களை எதிர்த்து நகரில் எந்த பொது நல அமைப்பு ஆர்ப்பாட்டம் செய்வது..?
(குறிப்பு - தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நிராகரித்த சர்வே எண் 278 இல் எப்படி இத்திட்டம் சாத்தியப்படும் உறுப்பினர்களே..! மக்கள் மிக தெளிவாக உள்ளார்கள்.)
தலைவியின் பதவியை இறக்க சில ஆண்டுகள் முன்பு முயற்சி செய்து நம்பிக்கைஇல்லா தீர்மானம் கொண்டு வந்தது தங்களுக்கு தோல்வியை ஏற்படுத்தியதால் இந்த பிரசுரத்தில் அதை மிக தெளிவாக உணர்ந்து வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் - வாழ்த்துக்கள்.
ஒருவருக்கு பதவியை அளிப்பதும்.. அதை பறிப்பதும் இறைவன் கையில் உள்ளது..
2. Re:... posted byசாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபார்)[24 February 2015] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39339
என்ன ஆர்ப்பாட்டம் நடத்தி என்ன பயன்.
மக்கள் என்னமோ நல்ல விழிப்புணர்வுடனும், தெளிவுடனும்தான் இருக்கின்றார்கள்.
தலைவி அவர்கள் லஞ்சம் பெற்றார், ஊழலுக்கு துணை புரிந்தார், இந்த கான்ட்ராக்டில் அன்பளிப்பு பெற்றார் என்று ஒரு ஆதாரபூர்வமான குற்றச்சாட்டு வைத்தீர்கள் என்றால் மக்களின் ஆதரவு கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.
- கண்ணியத்துக்குரிய MKT அப்பா காலத்து தீர்மானத்தையே நடைமுறை படுத்த துப்பு இல்லாத நகர்மன்றம்......!!!!!!!!!!!!!....!!!!!!!
- குறுக்கு வழியில் DCW விற்கு, முந்திய ஆணையர் கொடுத்த அனுமதியை நீக்கக் கூறி தலைவி அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை, 2 மெம்பர்கள் தவிர அனைவர்களும் எதிர்த்து, ஒட்டு மொத்த மக்களின் மனநிலைக்கு எதிராக நடந்து கொண்டதை என்னால் அன்று பார்க்க முடிந்தது. ஊரே அந்த அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி கிடக்கின்றது, இவர்கள் என்னமோ குழு அமைத்து பார்வை இடப் போகிறார்களாம்..!!
- பிரசுரத்தில் " துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்" என்று பொதுவாக போட்டு உள்ளார்களே, அனைத்து உறுப்பினர்களுமா தலைவிக்கு எதிராக உள்ளார்கள்..??
3. ர்காயலின் தலைவிதி!:... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[24 February 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39341
நகர் மன்ற தலைவியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
ஆகா,ஆரம்பிச்ட்டாங்கையா ஆரம்பிச்ட்டாங்க.இதையடுத்து தலைவி தன்னிலை விளக்க பொதுக்கூட்டம்.பின்னர் ஆர்ப்பாட்டம்,பின்னர் பொதுகூட்டம்.இதை அத்தனையையும் பார்த்துக்கொண்டிருக்கும் பேயன்கள் கூட்டம்தான் பொது மக்கள் கூட்டம்!
இந்த கூத்து நிக்கப்போவதும் இல்லை,நம் இழி நிலைக்கு முடிவு எத்தப்போவதும் இல்லை!
தலைவி மீது புகார்மனுவை சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு மேன்மை பொருந்திய மேதை 10-ம் வார்டு உறுப்பினர் தலைமை கையொப்பமிட்டு மற்றைய பல உறுப்பினர்கள் எல்லாம் கீழே கையெழுத்திட்டு அனுப்பி இருக்கிறார்கள்!
இந்த நகராட்சி தொடங்கி இரண்டாவது அல்லது மூன்றாவது கூட்டம் என்று நினைக்கின்றேன் இந்த 10-வது வார்டு புண்ணியவான் தலைவியைப்பார்த்து சொல்லி இருக்கிறார் நீங்கள் ஒரு அரைநாள் ஓய்வெடுத்து வீட்டில் உட்காருங்கள் நாங்கள் அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றிக் காட்டுகிறோம் என்று எங்கேயோ உலக அரங்கின் மைய கூடத்தில் இருக்க வேண்டியவர் சிறிது பிசகி 10-ம் வார்டில் உறுப்பினர் ஆகி அறைகூவலிட்ட அற்புத திறமைசாலி இன்று தலைவி எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமை தாங்கி இருக்கிறார் என்றால், எவரை தாங்கி நின்று இந்த முயற்சியோ இறைவன் அறிவான்!
நான் தெரியாமத்தான் கேட்க்கிறேன்,ஏன் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த சர்வே எண் 278 ஐ பிடித்து தொங்குகிறார்களோ தெரியவில்லை,அவர்கள் வாதப்படி தலைவிக்கு உள் நோக்கம் இருக்கிறது அதனால் தான் இந்த சர்வே என் 278ஐ மறுக்கிறார் என்று வைத்துக்கொண்டாலும், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியமும் இந்த சர்வே எண் 278 ஐ நிராகரிக்கிறதே,அதற்க்கு என்ன பொருள்.அந்த வாரியத்திற்கும் உள் நோக்கம் இருக்கிறதா? அல்லது தலைவிக்காக தலை ஆட்டுகிறதா?
முந்திய நகராட்சி தலைவரையும் எதிர்த்து இதுபோன்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடந்தது.தங்களை இயககும் தங்கமான தலைமையை திருப்திபடுத்துவதற்காக போராடியவர்களுக்கு அப்போது அப்போராட்டம் வெற்ற்யிலும் முடிந்தது.அன்றைய தலைவரும் தன் பதவியை துறக்க தயாரானார்.ஆனால் அந்த பருப்பு இன்று வேகாது!
இன்றைய தலைவி இரும்புத்தலைவி என்று சொல்வார்களே அது போன்றுதான் திடமாக இருக்கிறார்.ஈக்கள் கூட்டமெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் அணுவளவும் அசைக்க முடியாது என்பதைத்தான் இதுவரை கடந்த 31/2 வருடங்கள் பார்த்த உண்மை!
எஞ்சி இருக்கும் காலங்களிலும் இந்த சர்க்கஸ் வித்தைகளை பார்த்தபின் வேறு கூடாரத்திற்கு போக நாமும் தயாராக வேண்டியதுதான்.என்ன செய்வது இதுதான் காயலின் கணிசமான கேனயர்களின் தலைவிதியின் கல்வெட்டுகளாக சில "ஈகோ" மன்னர்களும்,ஏதும் கிடைக்காதா என்று ஏங்கும் ஈனர்க்களுமாக சேர்ந்து செதுக்கி வைத்து விட்டார்களே.எளிதில் அழிக்கவா முடியும்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
4. இந்த ஆர்ப்பட்டதிர்க்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதை தாங்களுக்கு அறிய தருகிறேன். posted byM.S.M. சம்சுதீன் - உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.)[24 February 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39356
சாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் அவர்களே..! பிரசுரத்தில் " துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்" என்று பொதுவாக போட்டு உள்ளார்களே, அனைத்து உறுப்பினர்களுமா தலைவிக்கு எதிராக உள்ளார்கள்..?? காப்பி பேஸ்ட் -
இந்த துண்டு பிரசுரதிற்க்கும் 13 வது வார்டு உறுப்பினராகிய எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை தாங்களுக்கு முதலில் அறிய தருகிறேன்.
இந்த துண்டு பிரசுரத்தில் தாங்கள் முக்கியமாக தெளிவு பெற வேண்டியது என்னவன்றால், 1000 தீர்மானம் போடப்பட்டுள்ளதாம் அதில் 50 மட்டுமே நிறைவேறி உள்ளதாம்.
தீர்மானம் நிறைவேறினால் அதை செயல்படுத்தும் பொறுப்பு யாரை சார்ந்தது என்பதை தாங்களும் நகரின் சாதாரண பாமர மக்களும் அறிந்து இருக்க கூடும் என்று எண்ணுகிறேன்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்தும் பொறுப்பு நகராட்சியின் செயல் அலுவலரின், ஆணையரின் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் கையில் உள்ளது என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதை இந்த துண்டு பிரசுரம் மூலம் தெளிவு படுத்துகிறது.
தேங்கி கிடக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற இவர்கள் செயல் அலுவலர்கள், ஆணையர், மற்றும் நகராட்சி அலுவலர்களை கண்டித்து ஆர்பாட்டம் செய்வார்களேயானால் அதை வரவேற்பதில் நான் முதல் ஆளாக இருப்பேன்.
இந்த ஆர்ப்பட்டதிர்க்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதை மீண்டும் தாங்களுக்கு அறிய தருகிறேன்.
5. Re:... posted byK.D.N.MOHAMED LKEBBAI (RIYADH)[25 February 2015] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39376
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் மரியாதைக்குரிய நகர் மன்ற உறுப்பினர்களின் இந்த நோட்டிசை பற்றி சொல்வதற்கு கண்டிப்பாகவே ஒன்றும் இல்லை .... ஆனால் நம்மை மன வருத்த பட வைக்கிறது அதுதான் உண்மை .....
காரணம் நம் ஊர் பொது மக்கள் யாவர்களும் நல்ல விழிப்புனர் உடனே உள்ளார்கள் என்பது தான் உண்மையே .....
நீங்கள் இன்னும் நம் தலைவி அவர்களை எதிர்பதில் தான் ரொம்பவும் குறியாகவே உள்ளீர்கள் ....என்பது தான் யாவர்களுக்கும் நன்கு தெளிவாகிறது ...மரியாதைக்குரிய தலைவி அவர்களை நீங்கள் எதிர்க்க அப்படி என்னதான் காரணமோ .... உங்களில் ஒரு சிலருக்கு நேர்மையான நம் தலைவி அவர்கள் ஒத்து போகாதது தான் காரணமோ ....என்னவோ .....நேர்மைக்கு பல சோதனைகள் வருவது காலம் தொட்டு வருவது தான் ....
ஊர் பொது மக்களுக்கு நீங்கள் யாவர்களுக்கும் .....நல்லது செய்யணும் என்கிற நோக்கத்துடன் செயல் படுவதாக தெரிய வில்லை ....
உங்களின் இந்த ஆர்ப்பாட்டம் .. நடத்த தப்போதைய காரணம் ...நம் மரியாதைக்குரிய தலைவி அவர்கள் ...தற்போது வெளியிட்ட '' பிரசுரம் தானோ ...
நம் ஊர் பொது மக்களின் உயிருக்கு உலை வைக்கின்ற '' இந்த கெடுகெட்ட'' DCW '' தொழிற்சாலை விசையத்தில் நீங்கள் நம் நகர் மன்ற கூட்டத்தில் ( நம் மரியாதைக்குரிய 13 வார்டு '' உறுப்பினர் அவர்களை தவிர ..+.. விரிவான விளக்கமும் நம் மரியாதைக்குரிய உறுப்பினர் அவர்கள் தந்து உள்ளார்கள் ....) நடந்து கொண்ட விதத்தை இன்னும் நம் ஊர் பொது மக்கள் மறக்கவே இல்லை ...மறக்கவும் மாட்டார்கள் என்பது தான் முழு உண்மை ..... மேலும் ஊர் மக்கள் மன வேதனையாகவே இருக்கிறார்கள் ....
DCW '' தொழிற்சாலை விசயத்தில் நம் ஊர் மக்கள் கடுமையான போராட்டதில் ஈடுபட்டு உள்ள போது உங்களின் இந்த செயல் கொஞ்சமும் சரியே இல்லை ...உங்களுக்கும் ..DCW ...க்கும் என்ன சம்பந்தம் உள்ளது ... இதற்க்கு உங்களால் விளக்கம் தர முடியுமா ???? ஏன் நீங்கள் யாவர்களும் நம் தலைவி அவர்களின் தீர்மானத்தை ஆதரிக்க வில்லை ..??
நம் ஊர் பொது மக்களுக்கு நீங்கள் நல்லது செய்ய நினையுங்கள் ....பொது மக்களாகிய நாங்கள் உங்களை முழுமையாக ஆதரிக்கிறோம் ....தலைவி அவர்களை எதிர்ப்பதை முதலில் நிறுத்துங்கள் ...பொது மக்கள் மீது கவனம் செலுத்துங்கள் .. ஊர் மக்களுக்கு பாதுகாவலனாக இருந்து நல்ல செயல் திட்டங்களை
செய்யலற்றுங்கள்.....
உங்கள் யாவர்களின் நல்லதோர் செயல் திட்டங்களை மக்களாகிய நாங்கள் எதிர் நோக்கி காத்து உள்ளோம் ...தயவு செய்து நீங்கள் ஒற்றுமையோடு இருந்து செயலாக்கி தாருங்கள் .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross