காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவில், சரிந்த நிலையிலிருந்த மின் கம்பம் அகற்றப்பட்டு, புதிய மின் கம்பம் நிறுவப்பட்டுள்ளது.
இப்பகுதி உட்பட சுற்றுவட்டாரத்திலுள்ள சில மின் கம்பங்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி, காயல்பட்டினம் தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பிலும், கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி.ஏ.ஷேக் தனிப்பட்ட முறையிலும் காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்கு, படங்களுடன் கூடிய கோரிக்கை மனுவை அளித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கே.டீ.எம். தெருவில் சரிந்த நிலையிலிருந்த இரும்பாலான மின் கம்பம் அகற்றப்பட்டு, புதிதாக சிமெண்ட்டால் ஆன மின் கம்பம் நிறுவப்பட்டது.
தகவல் & படங்கள்:
A.K.இம்ரான்
காயல்பட்டினம் மின்வாரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |