திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில், திருச்செந்தூர் - நாகர்கோவில் பாதையில் அமைந்துள்ள நான்காவது பாலத்தில், தென்னக ரயில்வே, ஸ்டீல் பீம்களுக்கு பதிலாக கான்க்ரீட் பீம்கள் பொருத்த திட்டமிட்டுள்ளது.
இப்பணிகள் - பிப்ரவரி 22 முதல் ஜூன் 14 வரை, ஞாயிற்றுக்கிழமைகள் (17 வாரங்கள்) மட்டும், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இதனால் பிப்ரவரி 22 முதல் ஜூன் 14 வரை, கீழ்க்காணும் மாற்றங்கள் ரயில் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ளது:
ஞாயிற்றுக்கிழமைகள் அன்று முற்றிலும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
(i) திருச்செந்தூரில் இருந்து காலை 10:25 மணிக்கு திருநெல்வேலி புறப்படும் பாசஞ்சர் (56035)
(ii) திருநெல்வேலியில் இருந்து மாலை 3:15 மணிக்கு திருச்செந்தூர் புறப்படும் பாசஞ்சர் (56036)
(iii) திருச்செந்தூரில் இருந்து மாலை 5:55 மணிக்கு திருநெல்வேலி புறப்படும் பாசஞ்சர் (56766)
ஞாயிற்றுக்கிழமைகள் அன்று பகுதியாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்
(i) தூத்துக்குடி - திருச்செந்தூர் பாசஞ்சர் (தூத்துக்குடி புறப்பாடு: காலை 8:45), திருநெல்வேலி வரை இயக்கப்படும் (காலை 11:15). திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கம் ரத்து (56767)
(ii) பழனி - திருச்செந்தூர் பாசஞ்சர் (பழனி புறப்பாடு: காலை 7:45), கோவில்பட்டி வரை இயக்கப்படும் (மதியம் 12:44). கோவில்பட்டி - திருச்செந்தூர் மார்க்கம் ரத்து (56767)
(iii) திருச்செந்தூர் - பழனி பாசஞ்சர் (திருச்செந்தூர் புறப்பாடு: காலை 11:10), திருச்செந்தூர் - கோவில்பட்டி மார்க்கம் வரை ரத்து செய்யப்பட்டு, கோவில்பட்டியில் இருந்து பழனிக்கு மதியம் 1:42 மணிக்கு புறப்படும் (56770)
ஞாயிற்றுக்கிழமைகள் அன்று காலதாமதம் செய்யப்பட்டுள்ள ரயில்கள்
(i) திருச்செந்தூர் - தூத்துக்குடி பாசஞ்சர், செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் கூடுதலாக நிற்க வைக்கப்பட்டு, தூத்துக்குடிக்கு 10 நிமிடங்கள் கால தாமதமாக மாலை 6:55 மணிக்கு வந்தடையும் (56768)
தகவல்:
தென்னக ரயில்வே, மதுரை கோட்டம்
|