உலக காயல் நல மன்றங்களின் கல்வித் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியருக்காக, இம்மாதம் 20ஆம் நாள் முதல் மார்ச் 02 ஆம் நாள் வரை கல்வி ஒளிபரப்பு நடைபெறுகிறது..
இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியரின் கல்வித் திறனைப் பெருக்கிடும் பொருட்டும், அரசுத் தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்றிட வேண்டும் என்ற நோக்கோடும், வழமை போல இவ்வாண்டும் - இம்மாதம் 20ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை, காயல்பட்டினம் நகரின் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான IIM TV, மற்றும் Channel 7 ஆகியவற்றில், பின்வருமாறு கல்வி ஒளிபரப்பு நடைபெறுகிறது:-
பல்வேறு கல்வி நிறுவனங்களின் திறமை மிக்க ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படும் இக்கல்வி ஒளிபரப்பை, இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவ-மாணவியர், குறித்த காலத்தில் அவசியம் பார்த்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இந்த ஒளிபரப்பு குறித்த - மேலே தரப்பட்டுள்ள நிகழ்ச்சி கால அட்டவணை பிரசுரம் நகரின் அனைத்து கல்வி நிறுவனங்களின் மூலமும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு விநியோகிக்க வழங்கப்பட்டுள்ளது. எனினும் இச்செய்தியைப் பார்ப்போர், உங்களுக்கு அறிமுகமான ப்ளஸ் 2 மாணவ-மாணவியருக்கு இதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, அவர்களை இந்நிகழ்ச்சியைப் பார்த்துப் பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமதூர் மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி, மாணவ-மாணவியர் சிறந்த சாதனைகள் பல புரிவதற்கும், கற்ற கல்வியைக் கொண்டு அவர்கள் தம் குடும்பத்தார், உற்றார் - உறவினருக்கும், ஊருக்கும், நாட்டுக்கும் நற்பயனளிக்கவும் அருள் புரிவானாக ஆமீன்.
இவ்வாறு இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E. மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம் - காயல்பட்டினம்.
இக்ராஃ கல்விச் சங்கத்தின் 2012-2013ஆம் ஆண்டு கல்வி ஒளிபரப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |