காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், நலத்திட்ட உதவிகளுக்காக 6 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில், அதன் செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 24.01.2015 சனிக்கிழமையன்று, ஹாஃபிழ் ஏ. எல். இர்ஷாத் அலி இல்லத்தில் நடைபெற்றது.
துணை தலைவர் ஹாஃபிழ் பி. எஸ். சாகுல் ஹமீது கிராஅத் ஓதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் வரவேற்புரையாற்றினார்.
பேரவையின் உறுப்பினர் எண்னிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி கூறிய அவர் மேலும் உறுப்பினர் எண்னிக்கையை அதிகரிக்க அனைவரும் முயற்சி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் பி.எஸ்.ஏ.அஹ்மத் கபீர் சமர்ப்பித்தார்.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
1. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 54 பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக சுமார் 5 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
2. காயல்பட்டணம் மழை, வெள்ள நிவாரண குழுவின் வேண்டுகோளை ஏற்று நிவாரண குழுவால் ஆய்வு செய்து ஒரு வீடு கட்ட நமது மன்றத்தின் ஓர் பங்காக ஒரு வீட்டின் பொறுப்பை எடுத்து, அதன் தொகைக்கு ரூபாய் 60,000 ஒதுக்கப்பட்டது.
3. ஷிஃபா மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ நிதி ஒதுக்கப்பட்டது.
4. பேரவையின் உள்ளூர் பிரதிநிதியாக செயலாற்றி வரும் ஜனாப் எஸ்.அப்துல் வாஹித் அவர்களுடன் கூடுதலாக ஜனாப் எஸ்.ஏ. இப்றாஹீம் மக்கீ அவர்கள் செயலாற்றுவார் என தீர்மானிக்கப்பட்டது.
5. வரும் மே மாதத்தில் பேரவை சார்பில் சிற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |