காயல்பட்டினம் நகராட்சியின் சேவைகளை பொது மக்கள் பெற, லஞ்சம் கோரப்பட்டால், அது குறித்த புகாரினை தனக்கு வழங்கும்படி - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
லஞ்சம் கொடுக்காமல் அரசு சேவைகளை பெறுவது –
அரசியல் சாசனம், மக்களுக்குத் தந்துள்ள அடிப்படை உரிமை!
அன்பார்ந்த பொதுமக்களே! நமதூர் காயல்பட்டினம் நகராட்சியில் சேவைகள் பெற லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது என புகார்கள் வருகின்றன. ஆதாரப்பூர்வமான அடிப்படையில் பெறப்படும் புகார்கள் மீது நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.
காயல்பட்டினம் நகராட்சியில் சேவைகள் பெற உங்களிடம் லஞ்சம் கோரப்பட்டால், எனக்கு உடனடியாகத் தகவல் தரும் பட்சத்தில், லஞ்சம் கோரியவர்கள் மீது சட்டப்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கள் புகார்களை – பதிவுத் தபால் மூலம் 28 மகுதூம் தெரு, காயல்பட்டினம் என்ற எனது முகவரிக்கோ அல்லது,
kayalchairman@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது,
நகராட்சி அலுவலகத்தில் என்னிடம் நேரடியாகவோ வழங்கலாம்.
அந்தப் புகாரின் நகலை,
The Director,
Vigilance and Anti-Corruption,
NCB 21, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.
என்ற முகவரிக்கும் அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,
ஐ.ஆபிதா ஷேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
|