ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றத்தின் 28ஆவது செயற்குழுக் கூட்டத்தில், மருத்துவ உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அமீரக தலைநகர் அபுதாபி காயல் நல மன்றத்தின் 28ஆவது செயற்குழு கூட்டம் 13 - 02 - 2015 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ அவர்களின் தலைமையில் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப்.மக்பூல் அஹமது மற்றும் பொறுளாளர் ஜனாப். ஹுசைன் நூர்தீன் ஆகியோர்களின் இல்லத்தில் வைத்து கூடியது. மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் H.L. இஜ்ஜத் மக்கி அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.
நமது மருத்துவ குழு மன்றத்தில் முன்வைத்த SHIFA மூலம் பெறபெற்ற, புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஓர் சகோதரியின் விண்ணப்பத்திற்கு ரூ 10,000 வழங்கி ஒப்புதல் அளித்தது.
மேலும் நமதூரின் பொதுவான பிரச்சனைகள், தேவைகள், குறைபாடுகள் இவைகளை அலசி, ஆராய்ந்து, நிவர்த்தி செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. நிலுவையில் உள்ள சந்தா தொகைகளை உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற உதவிட வேண்டும் என்று கேட்டு கொண்டதோடு, அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 13 – 03 - 2015 ஆம் தேதி வெள்ளியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீஅவர்கள் அறிவிக்க ஹாஃபிழ் F.சாகுல் ஹமீது அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
M.E. முகியதீன் அப்துல் காதர்
(செய்தி மற்றும் ஊடகத் துறை பொறுப்பாளர்)
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |