இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP) காயல்பட்டினம் கிளை சார்பில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், இம்மாதம் 17ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) 19.00 மணியளவில், இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம், ‘சிம்ஸன்’ செய்யித் உமர் தலைமையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ, “நபித்தோழர்களும், நாமும்” எனும் தலைப்பில் துவக்கமாக உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, “ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?” எனும் தலைப்பில் மவ்லவீ அப்பாஸ் அலீ உரையாற்றினார்.
பெண்களுக்குத் தனி இட வசதி செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |