விஸ்டம் பப்ளிக் பள்ளியில், இம்மாதம் 18ஆம் நாளன்று விளையாட்டு விழாவும், 21ஆம் நாளன்று ஆண்டு விழாவும் நடைபெறவுள்ளது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ்கள் வருமாறு:-
விஸ்டம் பப்ளிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 22:51 / 18.02.2015]
1. Re:...மாற்றம் ஒன்றே மாறாதது posted bymackie noohuthambi (colombo)[18 February 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39291
அது ஒரு கனாக் காலம். ஆங்கில மோகம் இன்று நேற்றல்ல நம் இரத்தத்துடன் ஊறி விட்டது. ஆங்கிலம் தெரியாதவர்கள் பேச தெரியாதவர்கள் செல்லாக் காசாக மதிக்கப் படுகிறார்கள். வெளி நாடுகளில் அவர்கள் மொழிகளிலேயே எல்லாம் நடந்தாலும் நமது நாட்டில் மட்டும் ஆங்கிலம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது . நமது தாய்மார்கள் உள்ளங்களிலும் அந்த நிலைதான் நீடிக்கிறது . இதன் விளைவாகவே நமது பிள்ளைகளை அண்மையில் உள்ள கமலாவதி பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதற்கு அவர்கள் துடியாய் துடிக்கிறார்கள்.
ஒரு காலம் வரும் அந்த காலத்தில் "DHEENUHUM DHEENAARUHUM QIBLAAHUM NISAAUHUM " அவர்கள் மார்க்கம் தீனார் என்ற பணம் ஆக இருக்கும் . பெண்கள் அவர்களுக்கு முன்னோக்கும் திசையாக இருக்கும் என்று நபிகள் நாயகம் சொன்னதாக ஒரு ஹதீத் செவி வழியாக கிடைத்தது ஆதாரம் கேட்பவர்களுக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் நாட்டு நடப்பு அப்படித்தான் இருக்கிறது. நாம் என்னதான் அடித்துப் பேசினாலும் அவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். இது அல்லாஹ் சொல்வதுபோல் MAVVADHATHAN VARAHMAA ...என்ற பாசத்தின் இறுக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் WISDOM பள்ளிக் கூட நிறுவனர்கள் வித்தியாசமாக யோசித்தார்கள். நாம் ஏன் கமலாவதி போல் ஒரு பள்ளி கூடத்தை நமதூரில் நிறுவி அந்த ஆங்கில தரத்தை இங்கே கொண்டு வர முடியாது. கலாசார சீரழிவு, வெள்ளிக் கிழமை மற்றும் ஐவேளை தொழுகைக்கு இடைஞ்சல் தரும் நிலையை மாற்ற ஏன் முடியாது என்று அவர்கள் சிந்தித்ததின் விளைவு இன்று WISDOM பள்ளி இரண்டாவது ஆண்டுக்குள் வெற்றிகரமாக நுழைந்திருக்கிறது. ஒரு காட்டுக் குள்ளே இருக்கிறதே என்று கவலைப் படுகிறவர்கள் கமலாவதி தோன்றிய காலமும் அப்படித்தான் இருந்தது என்பதை அறிய மாட்டார்கள். சாஹுபுரத்தில் இருந்து வந்து நமது வளங்களையும் உயிர்களையும் சூறையாட வந்த ஒரு கூட்டம் அங்கு வெற்றிக் கொடி நாட்டி உள்ளது. நமது ஊர் மக்கள் அதற்கு பலியாகி கொண்டிருக்கிறார்கள்.
WISDOM நிர்வாகிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நீங்கள் சோர்ந்து விடாதீர்கள். 23 ஆண்டுக் காலம் நபியவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி மக்களிடம் சொன்னபோது எள்ளி நகையாடியவர்கள் எல்லாம் நபி தோழர்களாக ரலியல்லாஹு அன்ஹு வரளூ அன்ஹு என்று அல்லாஹ்வால் அழைக்கப் படுகிறவர்களாக மாற - அவர்களை அப்படி மாற்ற நபிகள் நாயகம் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும் அவர்கள் அணுகு முறை எதிரிகளையும் அரவணைத்து செல்லும் முறை தான் அவர்களின் சாதனைகளில் முத்தாய்ப்பாக இருக்கிறது. அவர்கள் போதனைகளை விட அவர்களின் AKHLAAQ மிகைத்து நிற்கிறது. நீங்கள் அழகிய முன்மாதிரி மட்டுமல்ல அழகிய குணங்களிலும் மிகைத்து நிற்கிறீர்கள் என்ற கருத்துள்ள இறை வசனங்கள் நமக்கு நிறைய காணக் கிடைக்கின்றன.
SOFT APPROACH - POSITIVE THINKING இவற்றை நீங்கள் மட்டுமல்ல - ஆசிரியர்கள் ஆசிரியைகள் எல்லோரும் மாணவ மாணவிகளிடம் காட்டுங்கள். பெற்றோர் அல்லது மற்றோர் என்ன சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். காதில் வாங்கி அவர்களை அன்புடன் அழைத்து நல்ல விளக்கங்கள் சொல்லுங்கள். உங்களிடம் தவறுகள் இருப்பதாக தெரிந்தால் அவற்றை மனதார ஏற்றுக் கொண்டு அதற்கு மாற்று வழி தேடுங்கள். ADMIT MISTAKES . ஆயிரம் பக்கங்கள் கொண்ட இதிகாசங்கள் காவியங்கள் ஒவ்வொரு வரியாகத்தான் எழுதப்பட்டுள்ளன. ROME IS NOT BUILT IN A DAY .
EVERY PROBLEM HAS A SOLUTION . IF YOU CANNOT SOLVE A PROBLEM THEN YOU ARE PART OF THAT PROBLEM .
WISH YOU SUCCESS IN YOUR FUTURE ENDEAVOURS . HAVE A NICE DAY . MACKIE NOOHUTHAMBI , SRI LANKA 00945131287. mackiealim97@gmail .com
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross