பாகம் 1 காண இங்கு அழுத்தவும்
----------------------------
ஏப்ரல் 21, 1975 அன்று தமிழக அரசுடன், DCW நிறுவனம் செய்துக்கொண்ட குத்தகை ஒப்பந்தத்தில் - LOCAL CESS, LOCAL CESS SURCHARGE போன்ற
வரிகளை DCW நிறுவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
LOCAL CESS தொகை - குத்தகை வாடகை தொகையில் (23,474.03 ரூபாய்) - 45 சதவீதம் (10,563.32 ரூபாய்) என்றும், LOCAL CESS
SURCHARGE குத்தகை வாடகையின் ஒவ்வொரு ரூபாய்க்கும், ரூபாய் 2.50 என்ற அடிப்படையில் 58,685.07 ரூபாய் என்றும்
கணக்கிடப்பட்டது.
அதாவது - உரிய காலத்தில் தொகையை செலுத்தினால், DCW நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய தொகை - 92,722.42 ரூபாய்
ஆகும்.
மேலும் - குத்தகை வாடகை, LOCAL CESS, LOCAL CESS SURCHARGE ஆகியவற்றை - ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் துவக்கத்தில்
செலுத்தவேண்டும் என்றும், காலம் தவறி செலுத்தினால், ஆண்டொன்றுக்கு 12 சதவீதம் வட்டியும், DCW நிறுவனம் செலுத்தவேண்டும் என்றும் அந்த
ஒப்பந்தம் தெரிவித்தது.
இந்த ஒப்பந்தம் அடிப்படையில் DCW நிறுவனம் செயல்படவில்லை.
LOCAL CESS, LOCAL CESS SURCHARGE ஆகியவற்றை செலுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அவற்றை செலுத்த மறுத்து - சென்னை
உயர்நீதிமன்றத்தில் - 1978ம் ஆண்டு, DCW நிறுவனம் வழக்கு [Writ Petition No.3151/1978] தொடுத்தது. ஆனால் நீதிமன்றம், DCW
நிறுவனத்தின் கூற்றினை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜனவரி 21, 1980 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வி.ராமசாமி, LOCAL CESS, LOCAL CESS SURCHARGE ஆகியவற்றை வசூல் செய்ய,
அரசுக்கு உரிமை உள்ளது எனக்கூறி தீர்ப்பு வழங்கினார். இத்தீர்ப்பினை எதிர்த்து - DCW நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு
[Writ Appeal No.236/1980] செய்தது.
மேல் முறையீட்டினை விசாரித்த - நீதிபதிகள் (தலைமை நீதிபதி) எம்.எம். இஸ்மாயில் மற்றும் சத்தார் சயீத் ஆகியோர், DCW நிறுவனத்தின் மேல்
முறையீட்டினை நிராகரித்து - செப்டம்பர் 13, 1980 அன்று தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பினை தொடர்ந்து - 27.2.1981 அன்று, திருச்செந்தூர் வட்டாச்சியர் அலுவலகம், DCW நிறுவனத்தை - LOCAL CESS / LOCAL CESS
SURCHARGE தொகையாக 10,88,021.37 ரூபாயை கட்ட கூறியது. மேலும் - காலதாமதமான குத்தகை வாடகை தொகை மீதான வட்டி -
2,20,250.05 ரூபாயும் கட்ட கூறியது.
DCW இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 1975ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்திற்கு (1963 முதல்) - LOCAL CESS / LOCAL CESS SURCHARGE
தொகையை கட்ட இந்நிறுவனம் மறுத்தது. மேலும் - குத்தகை வாடகை பாக்கிக்கான வட்டி, 1963ம் ஆண்டு முதல் இல்லாமல், ஒப்பந்தம்
கையெழுத்தான, 1975ம் ஆண்டு முதல் தான் செலுத்த முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது. தனது கணக்கு அடிப்படையில் 4,00,693.94
ரூபாய் தான் செலுத்த வேண்டியுள்ளது என DCW நிறுவனம் தெரிவித்தது.
DCW நிறுவனத்தின் முறையீட்டினை தொடர்ந்து - வட்டாச்சியர், 27.6.1983 தேதிய கடிதம் மூலம் - அந்நிறுவனத்தை, 5,83,181.84 ரூபாய் மட்டும்
செலுத்த கூறினார். 1973ம் ஆண்டிற்கு முந்தைய வட்டி தொகையை அரசு தள்ளுபடி செய்து விட்டதாகவும், வட்டாச்சியர் தெரிவித்தார்.
இதனையும் DCW நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. வட்டாச்சியர் புதிதாக தெரிவித்துள்ள தொகையில் - 1975ம் ஆண்டிற்கு முந்தைய LOCAL CESS/
LOCAL CESS SURCHARGE பாக்கி தொகையும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கால தாமதம் (LIMITATION) ஆகிவிட்டதால் அத்தொகையை அரசு
வசூலிக்கக்கூடாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது.
24.11.1983 அன்று வட்டாச்சியர் மீண்டும் ஒரு கடிதத்தை - DCW நிறுவனத்திற்கு அனுப்பினார். அதில் - 1963 முதல் 1975 காலகட்டத்திற்கும், 82-
84 காலகட்டத்திற்கும், அந்நிறுவனம் - LOCAL CESS வகையில் 1,46,931.48 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், 1971 முதல் 1975
காலகட்டத்திற்கும், 82-84 காலகட்டத்திற்கும், LOCAL CESS SURCHARGE வகையில் 3,72,595.46 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், இது தான் கடைசி வாய்ப்பு என்றும் -
தெரிவித்தார்.
இதனையும் DCW நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்த கடித போக்குவரத்துக்கள் தொடர்ந்தன.
இந்த பிரச்சனையில் புதிய பரிமாணம் ஒன்று - 1980ம் ஆண்டு தோன்றியது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு - 5.5.1980 தேதிய கடிதம் மூலம், DCW நிறுவனம், குத்தகை ஒப்பந்த விதிகள்படி, நிலத்தின் மதிப்பீட்டு
தொகையான (CAPITAL VALUE) 3,91,233.91 ரூபாயை செலுத்தி - நிலத்தினை - நிறுவனம் வாங்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் -
எந்த வங்கி கணக்கில் - அத்தொகையை செலுத்த வேண்டும் என்றும் அந்நிறுவனம் வினவியது. அரசு இது குறித்து எந்த பதிலையும் - DCW
நிறுவனத்திற்கு வழங்கவில்லை.
இதற்கிடையில், அரசாணை ஒன்று 1988ம் ஆண்டு வெளிவந்தது. அதன்படி, அரசு நிலங்கள் - குறுகிய காலங்களுக்கு மட்டுமே குத்தகைக்கு
வழங்கப்படவேண்டும் என்றும், அந்த நிலங்கள் - விற்கப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது [G.O. MS.NO.2318; 14.12.1988].
இதனை தொடர்ந்து - 1989ம் ஆண்டு, மார்ச் மாதம் 29 ம் தேதியன்று, தன்னிச்சையாக - அரசின் அனுமதியில்லாமலேயே - DCW நிறுவனம், நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டது.
[தொடரும்]
|