இந்திய ஹஜ் குழு மூலம், இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பம் - ஜனவரி 19 முதல் பெறப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி தினம், பிப்ரவரி 20 என அறிவிக்கப்பட்டிருந்தது. கூடுதல் கால அவகாசம் கோரி, பல்வேறு மாநில ஹஜ் குழுவில் இருந்து கோரிக்கை வந்ததை அடுத்து, பிப்ரவரி 16 அன்று நடந்த தனது கூட்டத்தில், மார்ச் 2 வரை விண்ணப்பங்களை சமரிப்பிக்கலாம் என இந்திய ஹஜ் குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதன்படி - மார்ச் 2 க்கு முன்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என மேலும் இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
|