செய்தி: காயல்பட்டினம் நகராட்சியின் சேவைகளை பெற லஞ்சம் கோரப்பட்டால் தகவல் தரவும்: நகர்மன்றத் தலைவர் துண்டு பிரசுரம் விநியோகம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யார் செய்தாலும் குற்றம் குற்றமே! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[21 February 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39314
நகரமன்ற தலைவி அவர்களே ஒரு சந்தேகம்,
நம் நகராட்சியில் மக்கள் பணி செய்ய கடமைப்பட்டவர்கள் கையூட்டு கேட்டால் உடனே தகவல் தரும்படி கேட்டிருக்கிறீர்கள். எங்கள் புகார்களை எந்த அடிப்படையில் செய்வது.
வாய் மொழியால கேட்டால் அதை நிரூபிக்க முடியாதே, இதிலுள்ள சிக்கலை எப்படி களைவது. ஒருவேளை கையூட்டு பெற முடியவில்லையே என்று நம் வேலைகளை வேண்டுமென்றே தாமதப்படுதுபவர்களுக்குறிய நடவடிக்கை என்ன?.
நம் வேலைகளை தாமதபடுத்த சில காரணங்களை வேண்டுமென்றே உருவாக்குபவர்களிடம் உதவி பெறப்போகும் மக்களுக்கு, தங்கள் அவசரத்தேவையின் அவசியம் நாடி, எப்படியாவது நம் வேலை முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், யாருக்கும் தெரியாது நான் இந்த வேலைக்குறிய செலவுகளை தருகிறேன், இது இலஞ்சம் இல்லை, என் வேலை உடனே முடிந்ததற்கு பகரமாக ஒரு பிரியமுடைய பரிசுதான் என்று இலஞ்சத்திற்கு இன்னொரு பெயர் சூட்டி அந்த அதிகாரியையோ அல்லது அவ் வேலைக்குறிய பொறுப்பானவரையோ கையூட்டு பெறச்செய்ய நிர்ப்பந்திப்பவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது. அவர்கள் மீது எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது? .
நம் கண்ணோட்டம் ஒரு பிரிவு சாரார்கள்தான் குற்றம் செய்பவர்கள் போலவும் அவர்களை எப்படியெல்லாம் பிடிக்கலாம் என்ற சிந்தனையில் மட்டுமே நம்செயல்பாடுகள் இருக்கக்கூடாது.
குற்றம் யார் செய்தாலும் கையூட்டு பெறுபவர்,கொடுப்பவர் ஆக இரு பிரிவினரகள் மீதும் எப்பாகுபாடின்றி நம் நடவடிக்கை அமையுமேயானால் நாம் என்றென்றும் நடுநிலை நீதியுடயவர்கள் என்று மனசாட்சியுடைய மக்களால் போற்றப்படுவோம்!.
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross