செய்தி: காயல்பட்டினம் நகராட்சியின் சேவைகளை பெற லஞ்சம் கோரப்பட்டால் தகவல் தரவும்: நகர்மன்றத் தலைவர் துண்டு பிரசுரம் விநியோகம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகரில் பல ஆண்டுகளாக பழக்கபட்ட நோய் இது...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[22 February 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39317
பழக்கப்பட்ட கை அதை தான் எதிர்ப்பார்க்கும்...
எல்லோரும் மதிப்புக்குரிய திரு சகாயம் அவர்களை போல் இருக்க நினைப்பார்களா..!
காயல்பட்டினம் நகராட்சியில் பணி அமைந்தால் குறுக்கு வழியில் விரைவிலேயே தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளாலாம் என கயலப்ட்டினம் நகராட்சிக்கு டிரான்ச்பர் வாங்கி வர அவரின் மூத்த அதிகாரிக்கு அவர் சிறப்பு கவனிப்பு அளித்து நமது நகரின் நகராட்சிக்கு வருகிறார்கள் -
இங்கே வீட்டு பிளான் அப்ரூவல் அளிக்க பல ஆயிரம் / சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய பல நூறு / திருட்டு குடிநீர் இணைப்பு பெற பல ஆயிரம் / பிறப்பு - இறப்பு சான்றிதல் பெற சில நூறு / நகரில் சாலை பணிகள் மற்றும் பிற ஒப்பந்த பணிகள் நடந்தால் பல லட்சங்கள் இப்படி வாங்கி பழக்கப்பட்டவர்கள் எப்படி திருந்துவார்கள்.,,?
நாட்டில் எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்த மாதிரி கேவலமானவர்களை திருத்தவே முடியாது.
நகராட்சி அலுவலர் கேட்கும் போதும் / நகராட்சி அலுவலர் கேட்காத போதும் கொடுப்பவர்கள் இருக்கும் வரை அதை (கையூட்டு) வாங்குபவர்கள் வாங்கி கொண்டு தான் இருப்பார்கள்..!
நகரில் உள்ள எல்லா அலுவகத்திலும்
பல ஆண்டுகளாக பழகிய / பழக்கபட்ட நோய் இது...!
நகரில் செயல்படும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சென்னை - காயல்பட்டினம் கிளையில் நகரின் பல இளைய தலைமுறையினர்கள் லஞ்சத்திற்கு - ஊழலுக்கு எதிரான கொள்கையில் ஆர்வமாக இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதை அறியும் போது நகரின் இளைய தலைமுறையினர்கள் இந்நோய்க்கு மருந்து தெளிப்பார்கள் என்ற சிறிய நம்பிக்கை எனக்குள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross