إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون posted byyahya mohiadeen (dubai)[25 February 2015] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39369
أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه
நான் விடுமுறையில் ஊருக்கு சென்றபோதெல்லாம் இவர்களை பார்க்கச் செல்வது என் வழமை. அப்படி ஒவ்வொரு முறை சென்ற போதும் என்னையும், என் குடும்பத்தினரை பற்றியும் சுகம் விசாரிப்பார்கள். " பணம் சேர்த்து வைத்திருக்கியா? சொத்து ஏதும் வாங்கியிருக்கியா" என்றெல்லாம் அக்கறையுடன் கேட்பார்கள்.
மேலும், என் தந்தையின் பால்ய நண்பர். 1950 களில் இலங்கை மட்டக்களப்பு, ஏறாவூர் போன்ற ஊர்களில் வாணிபம் செய்த நிகழ்வுகள், பல்வேறு இன்சுவை நிகழ்வுகளையெல்லாம் ஞாபகத்துடன் சொல்வார்கள். தங்களின் தள்ளாத வயதிலும் படுக்கையில் அமர்ந்தவாறே ஒழு செய்து தொழுகையை நிறைவேற்றியதையும் நான் பார்த்தேன்.
"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.
யஹ்யா முஹியத்தீன்
அட்மின் அவர்களுக்கு...
மர்ஹூம் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,
துபை காயல் நல மன்றத்தின் பிரதிநிதி ஹாஜி சொளுக்கு எஸ்.ஏ.கே.பாவா நவாஸ் (தொடர்பு எண்: +91 98655 76539), இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், சொளுக்கு எஸ்.ஏ.கே. ஹபீபா, ஹாஜ்ஜா சொளுக்கு எஸ்.ஏ.கே.ஸஃபிய்யா பேகம், ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.ஏ.கே.அபுல்ஹஸன் ஷாதுலீ (தொடர்பு எண்: +966 53 859 2301) ஆகியோரின் தந்தையும்,
என்று திருத்திக் கொள்ளுங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross