Re:...சிந்தித்து பார்த்து செய்கையை மாற்றுங்கள்... posted bymackie noohuthambi (colombo)[26 February 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39378
அகவை 67 காணும் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கலை உலகில் முடிசூடா காதல் மன்னனாக வாழ்ந்து திரையுலகில் புகுந்து பின்னர் அரசியலில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்க வைத்துக்கொண்டு வாழ்வின் இறுதி வரை முதலமைச்சராக இருந்து மக்கள் பணியாற்றிய பொன்மன செம்மல் மக்கள் திலகம் புரட்சி தலைவர் என்று மக்களால் அழைக்கப் பட்ட எம்ஜியார் அவர்களின் அரசியல் வாரிசாக – தேர்ந்தெடுக்கப்பட்டு – “திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ” என்று எம்ஜியார் பாடிய பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்து, இன்று வரை கட்சியையும் அதன் சின்னத்தையும் கொடியையும் காப்பாற்றி வரும் செல்வி ஜெயலலிதா அவர்களை வாழ்த்துகிறோம்.
எம்ஜியாரிடம் இருந்த நற்பண்புகள், பணிவு உங்களிடம் இல்லை என்பதை மன வருத்ததுடன் நினைத்துப் பார்த்து கவலைப் படுகிறேன். அதே நேரம், துணிவு, அஞ்சாமை, எந்த பிரச்சினைக்கும் தீர்வு அந்த பிரச்சினையை துணிவுடன் எதிர்கொள்வதுதான் என்ற உங்களது சிந்தனை ஓட்டத்தை பாராட்டவும் செய்கிறேன்.நெருப்பாற்றில் நீந்தி வரும் உங்கள் ஆளுமை எனக்கு உடன்பாடான ஒன்று.
“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது” என்பதும் “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்” என்பதும் வள்ளுவன் வாக்காகும். என் எதிரிகளுக்கு தோல்வியை பரிசாக கொடுத்தேன் என்று புரட்சி தலைவர் சொல்வார். நீங்களோ என்னை எதிர்ப்பவர்களை இல்லாது ஒழிப்பேன் என்று சொன்னீர்கள். இரண்டுக்கும் உள்ள வார்த்தை சித்துக்களை நினைத்துப் பார்க்கிறேன். முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகள்.
நீங்கள் வழக்குகளிலிருந்து விடுபட்டு மீண்டும் இந்த தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்ற வேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன்.
ஆனாலும்
தவறு என்பது தவறி செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது.
தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்
தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்
சிந்தித்து பார்த்து செய்கையை மாற்று. தவறு சிறுசாய் இருக்கையில் திருத்திக்கொள். தெரிந்தும் தெரியாமல் நடந்திருந்தால் அது திரும்பவும் வராமல் பார்த்துக் கொள்
என்று உங்கள் அரசியல் ஆசான் பாடி சென்றது உங்களுக்கு எதிர்காலத்தில் ஒரு பாடலாக அல்ல ஒரு பாடமாக அமைய வேண்டும்.
மற்றப் படி உங்கள் மக்கள் சேவைகளை பாராட்டுகிறேன். நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.வாழ்த்துவதற்கு வயதும் தேவை இல்லை வணங்கவும் தேவை இல்லை. உயர்ந்த உள்ளம் இருந்தாலே போதும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross