வாழ்க ஜித்தா நல்மன்றம்,வளமுற்று ஓங்குக அதன் நற்பணிகள்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[26 February 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39380
ஒரே மண்ணில் உதயமான அத்தனை உள்ளங்களும் ஓரிடத்தில் ஒன்றாக கூடி மகிழ்வது எப்படிப்பட்ட இன்பக்கூடல் என்பதை அங்கிருந்து பார்த்தவர்கள் அணுவணுவான ரசனையுடன் உணர்ந்தார்கள்!
அடே நீ எப்ப வந்தே,உங்களை பார்த்து எத்தனை வருசமாச்சு, இவங்க உங்களை தேடினாங்க,நீங்க இந்த கூடலுக்கு வருவீங்கன்னு முழுசா நம்பினேன் என்ற உரையாடல்கள்
ஒருசேர ஒலித்துக்கொண்டே இருந்ததை நீண்ட நேரம் கேட்க முடிந்தது!,
இங்குள்ளவர்களுக்கு மட்டுமல்ல நம் ஜித்தா காயல் நலமன்ற ஒன்று கூடல் நிகழ்ச்சி,நம் தாயகத்திலுள்ளவருக்கு கூட மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, இந்த நிகழச்சியில் பங்கு கொள்ள ஆவலாக இருக்கிறது அன்றைய தினத்திற்கு எப்படியும் வர முயற்சிக்கிறேன் என்று ஒரு அன்பு சகோதரரும்,ஒரு இணையத்தளத்தில் முக்கிய பொறுப்பிலுள்ளவருமான அவர் கடந்த மாதம் என்னுடன் தொலைபேசியில் பேசி தன் பிரியத்தை வெளிபடுத்தினார்!
இந்த நிகழ்ச்சியில் மழலைகளின் மகிழ்ச்சிக்கி எல்லையே இல்லை..என்னமா விதவிதமாக விளையாடுகிறார்கள், வித்தை காட்டுகிறார்கள்.பார்ப்பதற்கறிய காட்சிகள் கொட்டிக்கிடந்தன.. விளையாட்டு வேடிக்கை எல்லாம் முடிந்த பின்னர் ஒரு விடலை பிஞ்சு கேட்டது,எல்லாம் முடிஞ்சுட்டோ இனிமே ஊட்டுக்குத்தானோ என்ற சோகம் கலந்த அந்த சொற்றொடர் இப்பொழுதும் என்காதுகளில் சுகமாக ரீங்க்காரித்துக்கொண்டே இருக்கிறது!
நற்பணிமன்ற புதிய நிர்வாகிகளின் தேர்வு நிலையில்தான் என்ன நிதானம்,என்ன நிதர்சமான உள்ளப்பூரிப்பு.ஒருவர் பெயரை சொன்னால் இல்லை என்னை விட்டுவிடுங்கள் என்ற பிடிவாதமான பெருந்தன்மை,ஒட்டு மொத்த காயல் உள்ளங்களும் ஒருமித்த கருத்தோடு ஒருதுளி மன பிசகில்லாமல் அத்தனை பொறுப்பாளர்களையும் அழகாக தேர்ந்தெடுத்த விதம் இருக்கிறதே,உண்மையிலேயே
அது ஒர் உன்னத எடுத்துக்காட்டு.அல் ஹம்திலில்லாஹ்!
நான் ரியாதின் காயல் நல மன்றத்தில் பொறுப்பாளராக இருந்த சமயத்தில்,வளைகுடாவிலேயே முதன் முதலாக அனைத்து காயல் சகோதர குடும்ப சரிதமாக் ஓரிடத்தில் ஒருங்கிணைந்த நிகழ்ச்சியை"பெருநாள் கூடல்"என்று பெயர் சூட்டி ஒருமித்தோம். மற்றைய ஊர் அமைப்புகள் கூட மூக்கில் விரல் வைத்து பிரமிக்கும் அளவிற்கு அந்த நிகழ்வுகள் நடந்தன.அதன் வழிவழியாக வந்த இந்த இன்ப கூடலை நம் ஜித்தா காயல் நலமன்றம் நணிசிறக்க செய்து கொண்டிருக்கிறது என்றால் அது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அணுக்கருணையும்,நம் அனைத்து காயல் உள்ளங்களின் உன்னதமான ஒற்றுமை உணர்வோடுகளும், ஊரார்களின் வாழ்த்துக்களுடனும் வெற்றியுடன் நடந்து முடிந்தது என்றால் அது மிகையல்ல!
அன்பு ஜித்தா நல மன்றத்தார்களே, இந்த நிகழ்ச்சயில் நமக்கு எவ்வளவு மன மகிழ்வு ஏற்படுகிறதோ அதே மகிழ்வு நம்மூர் வரியவர்களுக்கும்,ஏழை நோயாளிகளுக்கும்,எளிய மாணவ மணிகளுக்கும் ஏற்பட வேண்டுமென்று அவர்களுக்கு உதவி வழங்கி பார்ப்பதில் ஏற்படும் பேரானந்தம் தான் நிலையான ஆனந்தம்.அந்த ஆனந்தத்தை அடைய அத்தனை அங்கத்தினர்களும் ஆவலுடன் உங்கள் பங்களிப்பை
அளித்து வருகிறீர்கள்.எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்குறிய பலனையும்,பாதிக்கப்பட்டோர்களுடைய துவாவையும் கபூல் செய்து நம்மனைவர்களையும் நலமுடன் வாழ வழி வகுத்தருள்வானாக ஆமீன்! .
வாழ்க ஜித்தா நல்மன்றம்,வளமுற்று ஓங்குக அதன்
நற்பணிகள்!அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross