செய்தி: நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு! சமையல் ஏற்பாடுகளுடன் உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!! முழு அசைப்படப் பதிவுடன்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முன்பு இலங்கை வானொலியில் வேடிக்கை வினோத நிகழ்ச்சி என்று ஒரு நிகழ்ச்சி நடக்கும். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் ரசனையாக இருக்கும். நமது நகரமன்ற கூட்டங்கள் நடப்பதை இப்போது ஒரு ரசிகனாக இருந்து பார்ப்பதில் மகிழ்ச்சி தருகிறது.
"வேடிக்கையாய் பொழுது போகணும்
கொஞ்சம் விளையாட்டாய் வாழ்ந்து பார்க்கணும்"
என்ற முடிவுக்கு தலைவியும் உறுப்பினர்களும் வந்து விட்டார்கள் போல் தெரிகிறது.
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று முடியும் இந்த நகராட்சி காலம்"
என்று பாட தோன்றுகிறது.
புதிதாக கட்டிடம் கட்டி குளிரூட்டப் பட்ட அறையிலிருந்து சண்டை பிடிப்பதை விட, இப்படி வெளியில் காற்றோட்டமாக இருந்தால் புழுக்கம் இல்லாமல் இருக்கும். காக்கை குருவிகளும் நிகழ்சிகளை கண்டு ரசிக்கும்.
புரட்சி தலைவி அவர்கள் சட்ட மன்றத்தில் விதி 110 இன் கீழ் எல்லா தீர்மானங்களையும் நிறைவேற்றுவார். நமது நகர் மன்ற தலைவியும் அந்த விதியை பின்பற்றுகிறார்கள் போல் தெரிகிறது. அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் மட்டும் தலை விதியே என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross