விழிப்புணர்வோடிருந்து செயலாற்றிட வேண்டும். posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[14 April 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 3942
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகம், சுற்றுப்புற சூழல் தாக்கம் பற்றிய கணிப்பு மற்றும் மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்கதொகுப்பு
ஆகியவற்றை தாக்கல் செய்ய DCW நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது என்பது சரிதான், ஆனால் அவைகளை DCW முறையாக தாக்கல் செய்யுமா ? என்பது கேள்விக் குறியே ?.
புது திட்டங்கள் குறித்து மக்கள் கருத்து அறியும் நிகழ்ச்சி (Public hearing) நடத்தாமல் இருக்க DCW அனுமதி கேட்டிருந்தது என்றால் அதன் உள்நோக்கம் என்ன ? மக்கள் கருத்தை அறிந்தால் புதியத் திட்டத்திற்கு அனுமதி கிடைக்காது என்பதே.
மேலும் 2006 ஆம் ஆண்டே இத்தொழிற்சாலை குறித்த மக்கள் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பதாக DCW கூறி இருப்பது எப்படி புதிய திட்டத்திற்கு பொருந்தும் ? அது நடப்பில் உள்ள ( பழைய ) திட்டத்திற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியல்லவா ?.
மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகம் தமது துணை குழுவினை (Sub Committee) அனுப்ப திட்டமிட்டிருப்பது நல்லது.
என்னதான் ,எத்தனைக் குழுவைத்தான் அனுப்பினாலும் அவர்கள் பண பலமும், அரசியல் பலமும் கொண்டு - எல்லா குழுவையும் 'கூல்' படுத்தி அவர்கள் திட்டத்தை திட்டமிட்டப்படி தொடங்கிவிடுவார்கள்.
அவர்கள் திட்டம் செயலிழக்க வேண்டும் என்றால் ஒரே வழி மக்கள் பலமே! - மக்கள் சக்தியால் மட்டுமே அவர்களின் மனிதாபிமானமற்ற செயல்களை முறியடிக்க முடியும்.
எனவே இந்த சூழ்நிலையை நாம் பயன்படுத்தி DCW சம்பந்தமான அத்தனை விவரங்களையும் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகம் மற்றும் அனுமதி வழங்கும் சம்பந்தமான அனைத்துத் துறைகளுக்கும் ஒவ்வொரு பிரதியை அனுப்பி கொடுத்து விதிகளை கடினப்படுத்திடச் செய்ய வேண்டும்.
மேலும் அதன் மூலம் இப்போது நடந்துக் கொண்டிருக்கும் தொழிற்சாலையின் விதிமுறைகளும் முறையாக பேணப்பட வாய்ப்பு ஏற்படும்.
இன்னும் நாம் உறங்கி கொண்டிருந்தால் நம் ஊரின் சுகாதார நிலை கேள்விக்குறியாகிவிடும். எனவே ஊர் மக்களின் நன்மைக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் அத்தனை சகோதரர்களும் இதிலே இப்போதே விழிப்புணர்வோடிருந்து கவனம் செலுத்தி செயலாற்றிட வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! நமது நோக்கம் நிறைவேற கிருபை செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross