Re:...இரங்கல் posted byNIZAR (kayalpatnam)[04 March 2015] IP: 61.*.*.* India | Comment Reference Number: 39462
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்,,,
செல்வந்தர்களுக்கு கூட கிடைக்காத ஆறுதலும்,கவலையும் சாதாரன டீக்கடை நடத்தி வந்த பேச முடியாத இந்த சகோதரருக்கு மக்கள் அளித்து இருப்பது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறது.
இவரிடம் என்ன பணம் இருந்தது என்பதை விட எவ்வளவு கண்ணியம் இருந்தது என்பதுதான் காயலின் அணைத்து பகுதி மக்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.ஊரு முழுவதும் பரவி உள்ள இவர் மரணம்,இவரா? வாய் பேசாவிட்டாலும் அசைவால் அன்பையும்,மரியாதையும் தருபவர் என அவரின் நற்குணங்களை பகிர்ந்து கொள்வது இதயத்தை தொடுகிறது .
அதிலும் குறிப்பாக இவர் டி கடை நடத்தி வந்த தாயிம்பள்ளி ஜமாஅத் மக்கள் பெரிதும் இவரை நினைவில் வைத்துள்ளனர்.ஒரு மனிதன் வாழும்பொழுது மக்களிடம் நடந்து கொண்டதின் ரிசல்ட் அவனின் இறப்பில் வெளிபடுத்துகிறது.நானும் இவரின் கடைக்கு இடை இடையே செல்வதுண்டு.பொரித்து போட்ட போன்டாவின் சுவையால் அனைவரையும் கட்டிபோட்டவர்.தொலைவில் இருந்து இவரின் அன்பு கலந்த டி மற்றும் பலகாரங்கள் சாப்பிட வருவதை காண முடிந்தது.இவருக்காக ஒரு பதிவு போடுவதை கடமையாகவும்,குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தரும் என எண்ணுகிறேன்.
தான் வாழ்ந்த பொழுது ஒழுக்கத்துடனும்,
கண்ணியத்தின் இலக்கணமாக வாழ்ந்த இந்த எளிய சகோதரருக்கு
சொர்க்கத்தை சொந்தமாக்கவேண்டும் அணைத்து சகோதர்களும் வல்ல
இறைவனிடம் இறஞ்சுமாறு வேண்டி முடிக்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross