Re:...அவர் மனதுக்கு வயது இல்லை posted bymackie noohuthambi (colombo)[06 March 2015] IP: 103.*.*.* | Comment Reference Number: 39498
பவுசியா லாத்தா வீட்டுக்குத்தான் கடை சாமான் வாங்க என்னை என் தாயார் அனுப்புவார்கள். நான் சுட்டியாக பேசுகிறேன் என்று என் உம்மாவிடம் அவர்கள் என்னை பாராட்டி பேசுவதால் எனக்கும் அங்கு போய் வம்பளப்பது பழக்கமாகி போய் விட்ட அந்தா காலத்தை நினைத்து பார்க்கிறேன்.
எனது அருமை நூஹிய்யா இஸ்மாயில் அவர்களை நான் எப்படி கூப்பிடுவேன் என்றே எனக்கு ஞாபகம் இல்லை, ஒரு முறை மச்சான் என்பேன், ஒருமுறை மாமா என்பேன் ஒருமுறை காக்கா என்பேன். ஆம் எங்கள் நோன்புகால காரோம் போர்டு விளையாடும் போது மச்சான், கடையில் இருந்தால் மாமா இப்படி பலகோணங்களில் அவர்கள் எனக்கு உரித்தானவர்கள். அவர்கள் மனம் என்றும் இளமையானது. அவர்கள் மனசுக்கு வயசு இல்லை.
அவர்கள் கடையை தாண்டாமல் அவர் கண் படாமல் நான் வெளியே நடமாட முடியாது. இப்போது அந்த இடத்தில் எனது அருமை மருமகன் நூஹு அவர்கள் இருக்கிறார். வாப்பா இருக்கும்போது பளிச்சென்று இருக்கும் பாத்திரங்கள் இப்போது மின்னொளி வழங்கும் பாத்திரக் கடையாக ஏற்றம் பெற்றிருக்கிறது. அன்பும் பாசமும் அமைதியும் கொண்ட இஸ்மாயில் மாமா அவர்கள் மரணத்தோடு பல முறை போராடி வெற்றி பெற்று வந்தார்கள் ஆனாலும் என்றாவது ஒருநாள் மரணம்தான் வெற்றி பெறும் என்பதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு.
KULLU MANN ALAIHAA FAANIN VA YABQA VAJHU RABBIKA THUL JALAALI VAL IKRAAM....என்று திருமறை சொல்கிறது.
"தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்" என்று வள்ளுவம் சொல்கிறது. அது எனக்கு உடன்பாடு இல்லாதது என்றாலும் இஸ்மாயில் மாமா அவர்களின் மக்களுக்கு அது பொருந்தி வருகிறது.மருமகன் ஹாபில் யூசுப் சாஹிப், அவர்களது சகோதரி, அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி அவர்கள் வரை அந்த குடும்பத்தில் எல்லோருமே மார்க்க விஷயத்தில் வார்த்தெடுத்த தங்கங்கள். அவர்களுக்கு நானும் சொந்தக் காரன் என்று சொல்வது எனக்கு பெருமை தருகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லவைகளை பொருந்தி கொள்வானாக அவர்கள் பாவங்களை பொறுத்துக் கொள்வானாக. அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross