Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:20:14 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15529
#KOTW15529
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 6, 2015
ஹாஜி நூஹிய்யா இஸ்மாஈல் காலமானார்! இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5027 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

‘நூஹிய்யா டிரேடர்ஸ்’ எனும் பெயரில் காயல்பட்டினத்தில் பல்லாண்டு காலமாக பாத்திரக் கடை நடத்தி வரும் - சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜி ஊசி எம்.என்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற நூஹிய்யா இஸ்மாஈல் - இன்று 10.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. அன்னார்,

மர்ஹூம் ஊசி முஹம்மத் நூஹ் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ம.உ.யூஸுஃப் ஸாஹிப் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் நஹ்வீ மு.க.செய்யித் அஹ்மத் ஆலிம் முஃப்தீ அவர்களின் மைத்துனரும்,

மர்ஹூம் ஊசி எம்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்களின் சகோதரரின் மகனும்,

மர்ஹூம் அல்ஹாஃபிழ் ஊசி எம்.என்.மஹ்மூத், மர்ஹூம் ஊசி செய்யித் அஹ்மத் புகாரீ, அல்ஹாஜ் ஊசி எஸ்.எச்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற சின்னத்தம்பி, அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் ஊசி எஸ்.எச்.முஹம்மத் அப்துல் காதிர், அல்ஹாஜ் ஊசிரி எஸ்.எச்.பாஜுல் அஸ்ஹப் ஆகியோரின் சகோதரரும்,

ஹாஜ்ஜா ஒய்.எஸ்.ஃபவுஸிய்யா என்பவரின் கணவரும்,

மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் ஏ.கே.எஸ்.ஷெய்கு அலீ ஜபரூத் மவ்லானா அவர்களின் சகலையும்,

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மேலாளர் ஹாஜி ஒய்.எஸ்.உமர் ஃபாரூக்கின் மச்சானும்,

முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிர்வாகி ஹாஜ்ஜா எம்.ஐ.கதீஜத்துல் குப்ரா முஅஸ்கரிய்யா, ஹாஜி எம்.ஐ.முஹம்மத் நூஹ், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி அரபி ஆசிரியர் ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் (தொடர்பு எண்: +91 73056 60581) ஆகியோரின் தந்தையும்,

அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீயின் (தொடர்பு எண்: +91 98421 82780) மாமனாரும்,

ஹாஃபிழ் எஃப்.ஷெய்க் ஸலாஹுத்தீன், ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மாமாவும்,

ஹாஃபிழ் ஏ.ஏ.கே.ஹாஃபிழ் அமீர், எம்.என்.செய்யித் அஹ்மத் புகாரீ, ஒய்.எஸ்.முஹம்மத் இஸ்மாஈல், ஹாஃபிழ் சொளுக்கு ஹபீப் முஹம்மத் இஸ்ஸத்தீன் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 17.00 மணியளவில் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் T.S.A.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ

படம்:
ஹாஃபிழ் B.S.முஹம்மத் அல்அமீன்


[விரிவான தகவல்கள் இணைக்கப்பட்டன @ 13:01 / 06.03.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்....
posted by Mashoor (Gujrat) [06 March 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 39495

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்.....

மர்ஹூம் அவர்கள் நமதூரின் மூத்த பாத்திர வியாபாரியும் நல்ல பண்பாளரும் ஆவார்கள்.

வல்ல இறைவன் அன்னாருக்கு மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் பொருமையை தந்தருள்வானாக..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA) [06 March 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 39496

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வ்னாக அமீன் .அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்னும் மேலான பொறுமையை கொடுதருல்வனாக அமீன்

தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்- (ஜித்தா..) [06 March 2015]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 39497

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மன வலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான் - மற்றும் குடும்பத்தினர்கள்
காயல்பட்டினம்.ஜித்தா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...அவர் மனதுக்கு வயது இல்லை
posted by mackie noohuthambi (colombo) [06 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39498

பவுசியா லாத்தா வீட்டுக்குத்தான் கடை சாமான் வாங்க என்னை என் தாயார் அனுப்புவார்கள். நான் சுட்டியாக பேசுகிறேன் என்று என் உம்மாவிடம் அவர்கள் என்னை பாராட்டி பேசுவதால் எனக்கும் அங்கு போய் வம்பளப்பது பழக்கமாகி போய் விட்ட அந்தா காலத்தை நினைத்து பார்க்கிறேன்.

எனது அருமை நூஹிய்யா இஸ்மாயில் அவர்களை நான் எப்படி கூப்பிடுவேன் என்றே எனக்கு ஞாபகம் இல்லை, ஒரு முறை மச்சான் என்பேன், ஒருமுறை மாமா என்பேன் ஒருமுறை காக்கா என்பேன். ஆம் எங்கள் நோன்புகால காரோம் போர்டு விளையாடும் போது மச்சான், கடையில் இருந்தால் மாமா இப்படி பலகோணங்களில் அவர்கள் எனக்கு உரித்தானவர்கள். அவர்கள் மனம் என்றும் இளமையானது. அவர்கள் மனசுக்கு வயசு இல்லை.

அவர்கள் கடையை தாண்டாமல் அவர் கண் படாமல் நான் வெளியே நடமாட முடியாது. இப்போது அந்த இடத்தில் எனது அருமை மருமகன் நூஹு அவர்கள் இருக்கிறார். வாப்பா இருக்கும்போது பளிச்சென்று இருக்கும் பாத்திரங்கள் இப்போது மின்னொளி வழங்கும் பாத்திரக் கடையாக ஏற்றம் பெற்றிருக்கிறது. அன்பும் பாசமும் அமைதியும் கொண்ட இஸ்மாயில் மாமா அவர்கள் மரணத்தோடு பல முறை போராடி வெற்றி பெற்று வந்தார்கள் ஆனாலும் என்றாவது ஒருநாள் மரணம்தான் வெற்றி பெறும் என்பதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு.

KULLU MANN ALAIHAA FAANIN VA YABQA VAJHU RABBIKA THUL JALAALI VAL IKRAAM....என்று திருமறை சொல்கிறது.

"தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்" என்று வள்ளுவம் சொல்கிறது. அது எனக்கு உடன்பாடு இல்லாதது என்றாலும் இஸ்மாயில் மாமா அவர்களின் மக்களுக்கு அது பொருந்தி வருகிறது.மருமகன் ஹாபில் யூசுப் சாஹிப், அவர்களது சகோதரி, அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி அவர்கள் வரை அந்த குடும்பத்தில் எல்லோருமே மார்க்க விஷயத்தில் வார்த்தெடுத்த தங்கங்கள். அவர்களுக்கு நானும் சொந்தக் காரன் என்று சொல்வது எனக்கு பெருமை தருகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லவைகளை பொருந்தி கொள்வானாக அவர்கள் பாவங்களை பொறுத்துக் கொள்வானாக. அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [06 March 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39500

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்.....

வல்ல இறைவன் அன்னாருக்கு மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொருமையை தந்தருள்வானாக..ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by drnoordeen (muscat) [06 March 2015]
IP: 37.*.*.* Oman | Comment Reference Number: 39501

Innallilhi wa ilaihi rajiwoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [06 March 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 39502

அஸ்ஸலாமு அலைக்கும் .

அருமை அல்ஹாஜ் நூஹிய்யா முஹம்மத் இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) .

நூஹிய்யா எனும் ஒரு சிறந்த நிறுவனத்தை துவக்கி நமதூரில் அனைவருக்கும் தேவையான ஒரு அழகிய தொழில் நிறுவனத்தை திறம்பட நடத்தி வந்தார்கள் . வீட்டிலும் அவர்களின் நிறுவனம் அவர்களின் குடும்பதார்களால் சிறப்பாக நடாத்தி வரப்படுகிறது .

கடுமையான முயற்சியும், எந்தப் பொருளை கொடுத்தாலும் அதனை ரிப்பேர் செய்து நல்ல கண்டிசனாக ஆக்கி தரும் அளவிற்கு திறமை உள்ளவர்கள் . அனைவரிடமும் அன்பாக பேசும் அவர்கள் , தமாசாகவும், உரிமையோடும் பேசும் நற்குணமுள்ளவர்கள் .

முஹல்லாவில் நடைபெறும் கல்யாண காட்சிகள் , இதர நிகழ்சிகள் அனைத்திலும் பங்குபெற்று, நிகழ்சிகள் முடியும்வரை அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பவர்கள் .

அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்து ஆற்காடு கட்டிடத்தில் தங்கிய போது அணைத்து ஹாஜிமார்களுக்கும் லக்கேஜ்களையும் வலியசென்று அருமையான முறையில் பார்சல் செய்து கொடுப்பார்கள் . அப்போது நானும் அவர்களுக்கு அருகில் இருப்பேன் . பார்சல் செய்யும் முறையை அழகிய முறையில் கற்று தந்தார்கள் .

அவ்வருடம் ஹஜ்ஜின் போது நானும், அருமை சகோதரர் அஹ்மத் ஆலிமும் புதிய விரிவாக்க அரபா மைதானத்தில் காணாமல் போகி, மீண்டும் மறுநாள் அதிகாலையிலேயே முஜ்தலிபா வந்து சந்திக்கும் வரை இரவெல்லாம் வருவோர், போவோர் என அனைவரிடமும் எங்கள் இருவரையும் பற்றி விசாரித்து , இரவெல்லாம் தூங்காமல் , அழுதுக் கொண்டு இருந்த அந்த அன்பு, பாசம் நிறைந்த நிகழ்ச்சி இன்னும் எனது நினைவில் உள்ளது .அல்லாஹ் அனைவருக்கும் போதுமானவன்.

அன்னாரின் இழப்பு மாபெரும் இழப்பாகும். ஒரு சிறந்த நிர்வாகி நம்மை விட்டும் பிரிந்தது மிகவும் கவலை அளிக்கிறது .

வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தை நாம் அனைவரும் பொருந்தி கொள்வது நம் யாவரின் மீதும் கடமையாகும்.

அன்னாரை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினர்கள் , உற்றார், உறவினர்கள் குறிப்பாக அருமை சகோதரர் அல்ஹாஜ் , அல்ஹாபில் மௌலவி, H.A. அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி, அல்ஹாஜ்ஜா கதீஜதுள் குப்ரா, அருமை பௌஜியா மாமி , அருமை நண்பன் அல்ஹாஜ் முஹம்மத் நூஹு , அருமை தம்பி அல்ஹாபில் யூசுப் சாஹிப் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் . அல்லாஹ்விற்காக சபூர் செய்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .

கிருபையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், குறைகள் யாவற்றையும் மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி, ஒளிமயமாக்கி , கேள்வி கணக்கை எளிதாக்கி , நாளை மறுமையில் அண்ணல் கோமான் முஹம்மத் முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் சபாத் எனும் பரிந்துரைக்கி ஆளாகி , ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் குடியமர்துவானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன்!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by abdul wadood (jaipur) [06 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39503

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

انا لله وانا اليه راجعون

وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واعذه من عذاب القبر وعذاب في النار اللهم اغفرله وارحمه

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட அன்னாரின் நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் பிரிவை தாங்கிடும் மன வலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

அப்துல் வதூத் ஜெய்பூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [06 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39504

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்.....

மர்ஹூம் அவர்கள் நமதூரின் மூத்த பாத்திர வியாபாரியும் நல்ல பண்பாளரும் ஆவார்கள்.

வல்ல இறைவன் அன்னாருக்கு மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் பொருமையை தந்தருள்வானாக..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [06 March 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39505

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.

இறையருள் நிறைக.

மாஷாஅல்லாஹ் தன்னம்பிக்கைகும் விடாமுயற்சிக்கும் ஒருஎடுத்துக்காட்டாக வாழ்ந்துவிட்டு மறைந்திருக்கும் எங்கள்முஹம்மது இஸ்மாயீல் பெரியப்பாஅவர்கள் ஊரில் ஒருபாத்திரக்கடையோடு சிமெண்ட்வியாபாரமும் செய்துவந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் தாம்செய்ததொழில் தன்னோடு முடிந்துவிடாமல் தமதுவாரிசிற்கும் தொடர நல்லவழிகாட்டிச்சென்றிருக்கிறார்கள்

சிலஆண்டுகளுக்குமுன் பெரியப்பாஅவர்கள் குடும்பத்துடன் ஹஜ்ஜுக்குவந்திருந்தார்கள் எனதுமனைவியும் உடன்வந்திருதார் நானும் ஹித்மத் செய்வதற்காக ரியாதிலிருந்து சென்றுஅவர்களுடன் தங்கினேன் பெரியப்பாஅவர்கள் தமக்கிருந்தநோயிலிருந்து நிவாரணம்பெற்றுவந்து அந்த ஹஜ்ஜை நிறைவேற்றினார்கள் வல்லஇறைவன் அவகள்வாழ்நாளில்செய்த பாவப்பிழைகளைப்பொறுத்து நல்லமல்களைஎல்லாமேற்று நல்லபதவியைக்கொடுத்தருள்வானாகஆமீன்.

அந்த ஹஜ்ஜுகால வேளைகளில் அவர்களுடன்பழகியதில் அவர்களுக்கிருந்த தன்னார்வமும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் அவர்களுக்கு மாஷாஅல்லாஹ் அந்த ஹஜ்ஜை நிறைவேற்றும்வெற்றியை ஈட்டித்தந்தது அல்ஹம்துலில்லாஹ்.

நான் ஒருவாரத்திற்குமுன் ரியாதிற்குப்புறப்பட்டுவருமுன் அவர்களின் பூட்டிக்கு இளைஞர் ஐக்கியமுன்னணியில் போலியோ சொட்டுமருந்து புகட்டிஎடுத்துவந்து அவர்களிடம் பூட்டியைக்காண்பித்து பயணம்சொல்லிவிட்டுதான்வந்தேன் அப்பொழுது எனதுகைகளில் நல்லநறுமணமுள்ள அத்தர்பூசிதுஆச்செய்து வழியனுப்பினார்கள் அல்ஹம்துலில்லாஹ். அந்த அத்தரின்மணம்போல் நல்லமனம்படைத்தவர்கள், இன்றுஅவர்களைப்பிரிந்துவிட்டோம் பொறுப்பதற்குக்கடமைப்பட்டுள்ளோம் க்ஹைர்.

வல்லஇறவன் அவர்களின் மண்ணறையைப்பிரகாசமாக்கி கண்மணி நாயகாம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் நற்பரிந்துரையுடன் மேலானசுவனத்தில் வீற்றிருக்கச்செய்வானாக ஆமீன் அவர்களைப்பிரிந்த குடும்பத்தினர் அனைவருக்கும் அழகியபொறுமையைக்கொடுத்து அவ்விடத்திற்கு நிறைவானாஒருவரைவிரைவில் அமர்த்தியருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [06 March 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39507

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பின் சகோதரர்கள் ஜனாப் நூஹ் ஹாஃபிழ் யூஸுப்ஸாஹிப் ஆகியோர்களின் தந்தை நூஹிய்யா இஸ்மாயில் ஹாஜி அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவன்த்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக ஆமீன்.

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by முஹம்மது அப்துல் காதர் (துபாய்) [07 March 2015]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 39511

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிவூன்.....

வல்ல இறைவன் அன்னாருக்கு மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் பொருமையை தந்தருள்வானாக..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [07 March 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39514

மரியாதைக்குரிய அல்ஹாஜ் நூஹிய்யா முஹம்மத் இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) . எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி சபூர் செய்து கொள்வோமாக.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து, மண்ணறையை விசாலமாகவும், பிரகாசமாகவும் ஆக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனபதி புகுந்திட நல்லருள் புரிவானாக.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [07 March 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39515

அஸ்ஸலாமு அலைக்கும் .

இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்!!!

மதிப்புக்குரிய அருமை அல்ஹாஜ் நூஹிய்யா முஹம்மத் இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன். அல் பக்காவுளில்லாஹ்!!!

நூஹிய்யா எனும் ஒரு சிறந்த நிறுவனத்தை துவக்கி நமதூரில் அனைவருக்கும் தேவையான ஒரு அழகிய தொழில் நிறுவனத்தை திறம்பட பல்லாண்டு காலமஹா நடத்தி வந்தார்கள் . அவர்ஹளது துணைவியார் வியாபாரத்திலும் மிக்க திறமை பெற்றவர்ஹல் என்பது அனைவர்ஹளும் அறிந்த ஒன்று.

எப்போதும் விடுமுறையில் ஊர் போஹும் போது தவறாமல் சந்தித்து சலாம் கொடுத்து, துஆ பெற்று வரு வருவது என் வழக்கம். அனைவரிடமும் அன்பாகவும் + உரிமையோடும் பேசும் நற்குணமுள்ளவர்கள் .

கண்ணியத்துக்குரிய காஜா ஆலிம் குறிபிட்டது மறக்க முடியாத உண்மை, வருடம் 1993 நானும் எஸ். எ. மொஹிடீன் மாமா தலைமையில் ஜிட்டாஹ் வாசிஹளுடன் ஹஜ் சென்றபோது, பாசத்துக்குரிய அருமை சகோதரர் அஹ்மத் ஆலிமும் + காஜா ஆலிம் அவர்ஹளும் புதிய விரிவாக்க அரபா மைதானத்தில் காணாமல் போகி, மீண்டும் மறுநாள் அதிகாலையிலேயே முஜ்தலிபா வந்து சேரும் வரை தூங்காமல் , அழுதுக் கொண்டு இருந்த அந்த அன்பு, பாசம் நிறைந்த நிகழ்ச்சி இன்னும் எனது நினைவிலும் ஜெட்டாஹ் காயல் வாசிஹளும் மறக்க முடியாது. .அல்லாஹ் அனைவருக்கும் போதுமானவன். அன்னாரின் இழப்பு மாபெரும் இழப்பாகும். வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தை நாம் அனைவரும் பொருந்தி கொள்வது நம் யாவரின் மீதும் கடமையாகும்.

அன்னாரை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினர்கள் , உற்றார், உறவினர்கள் குறிப்பாக அருமை சகோதரர் அல்ஹாஜ் , அல்ஹாபில் மௌலவி, H.A. அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்லரி, அல்ஹாஜ்ஜா கதீஜதுள் குப்ரா மச்சி, அருமை பௌஜியா மாமி , அருமை காக்கா அல்ஹாஜ் முஹம்மத் நூஹு , அருமை நண்பர், அல்ஹாபில் யூசுப் சாஹிப் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், துஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் . அல்லாஹ்விற்காக சபூர் செய்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .

கிருபையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், குறைகள் யாவற்றையும் மன்னித்து அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி, ஒளிமயமாக்கி , கேள்வி கணக்கை எளிதாக்கி , நாளை மறுமையில் அண்ணல் கோமான் முஹம்மத் முஸ்தபா (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்களின் சபாத் எனும் பரிந்துரைக்கி ஆளாகி , ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் குடியமர்துவானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன்!!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். ஹெச்.
எஸ். ஹெச். உம்மு ரஷீதா இப்ராகிம், ஆலிமா முஅஸ்கரியாஹ்
மக்கல்ஹள் + உறவினர்ஹல்.
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by A.NoormohamedZakariya (RIYADH K.S.A) [07 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39517

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன். வல்ல இறைவன் அன்னாருக்கு மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் பொருமையை தந்தருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [07 March 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39518

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வெள்ளிக்கிழமை காலை, மிக்ஸியில் மசாலா அரைத்துக்கொண்டு இருக்கும் போது, சட சட என்று பயங்கர சப்தம். பிளேட்,வாசர், மோட்டார் ஹோல்டர் எல்லாம் உடைந்து விட்டது.

யாராவது ஊரில் இருந்து வந்தால், நூஹிய்யா இஸ்மாஈல் காக்கா விடம் வாங்கிட்டு வரச்சொல்லனும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

சிறிது நேரத்தில் மனைவியிடம் இருந்து மெசேஜ். நூஹிய்யா இஸ்மாஈல் அப்பா வபாத் என்று.அதிர்ந்தேன். சிறிது நேரத்திற்கு முன்பு நினைத்த ஒரு நல்ல மனிதர் மரணித்து விட்டார்கள் என்று..! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனதில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Abdul Hadhi (Al Ruwais jeddah) [07 March 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39519

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொருத்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவன பதவியை கொடுதருல்வ்னாக அமீன் .அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் சபுரன் ஜமீலா என்னும் மேலான பொறுமையை கொடுதருல்வனாக அமீன்

அப்துல் ஹாதி JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. நன்றி அறிவிப்பு!
posted by Noohiyya Traders Family (Kayalpatnam) [07 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39520

மர்ஹூம் அல்ஹாஜ் நூஹிய்யா முஹம்மது இஸ்மாயில் அவர்களது மறைவுக்கு அனுதாபத்தையும், துஆக்களையும் தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மர்ஹூம் அவர்களது ஹக்கில் மேலும் துஆ செய்ய வேண்டுகிறோம்.

இவண்,
நூஹிய்யா டிரேடர்ஸ் குடும்பத்தார்,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [07 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39523

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. சுறுசுறுப்பின் இலக்கணம்!
posted by S,K.Salih (Kayalpatnam) [08 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39525

நமதூரில் கடை வைத்திருக்கும் பலர், அவர்கள் நினைக்கும் நேரத்தில் திறப்பதும், நினைக்கும் நேரத்தில் பூட்டுவதும் (அதாவது காலையில் விருப்பம் போல் விழித்து, கிடைத்த நேரத்தில் கடையைத் திறப்பதும், இரவில் கட்டுப்பாடின்றி 11 மணிக்குப் பிறகு கடையை மூடுவதும்) வாடிக்கை.

இவர்களெல்லாம் கடை வைப்பதற்கு முன்பே நமதூரில் பன்னெடுங்காலமாக நூஹிய்யா டிரேடர்ஸ் எனும் பெயரில் அழகிய பாத்திரக் கடையைத் துவக்கி, குறித்த நேரத்தில் கடையைத் திறந்தும் - மூடியும், சுறுசுறுப்பின் இலக்கணமாய், ஊக்கத்தின் உறைவிடமாய் இயங்கிக் காட்டியவர் இஸ்மாஈல் மாமா அவர்கள்.

புதிதாக வாங்கும் பாத்திரங்களில், அவர்களது திருக்கரங்களால் பெயரடிக்கும் கருவி கொண்டு குண்டு குண்டான எழுத்துக்களில் அச்சு போல பெயரடித்துத் தரும் அவர்களின் திறமை ஈடு இணையற்றது.

சிறு வயதில், நானும் - என் காக்காவும் வீட்டில் ஒரே மோதிக்கொண்டதால் தென்காசித் தீர்ப்பாக - எங்கள் தாயார் எங்கள் இருவருக்கும் தனித்தனி உணவுத் தட்டும், கறிக்கிண்ணமும் வாங்கினார். அவையிரண்டிலும், “ஷமீமுல் இஸ்லாம்” என்றும், “முஹம்மத் ஸாலிஹ்” என்றும் அவர்கள் கைகளால் பொறித்துத் தந்த பெயர் இன்றளவும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கிறது.

தான் சுகவீனப்பட்டு, நடை தளர்ந்த காலகட்டத்திலும், கையில் ஒரு கரம்பாட்டல் (ஃப்ளாஸ்க்) தேனீருடன் தெருவில் காத்திருப்பார்கள். அவர்களது மலர்ந்த முகத்தைக் காணும் இரு சக்கர வாகன ஓட்டிகள் - அவர்கள் யாராயிருப்பினும், எந்தக் கொள்கையுடையவர்களானாலும், மாமா அவர்களை ஏற்றிச் சென்று கடையில் இறக்கிவிட்டு வருவதை ஒரு புனிதப் பணியாகவே கருதினர். இந்த பாக்கியம் அவ்வப்போது எனக்கும் கிடைத்தது.

மிகவும் சுகவீனப்பட்டு, நீர் பிரிய பையும் பொருத்திய நிலையிலும், ஏதோ நல்ல உடல் ஆரோக்கியவான் போலவே தன்னைக் கருதி, வீட்டிலுள்ளோர் - உறவினர் யாவரும் தடுத்தபோதிலும், அக்கம்பக்கத்து விசேஷங்கள், நோய் விசாரணைகள், மரணங்களில் கடமையெனக் கருதி கலந்துகொண்டவர்கள் மாமா அவர்கள்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். மாமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் - குறிப்பாக எனது ஆசிரியர் யூஸுஃப் ஹாஃபிஸா அவர்கள், முஹம்மத் நூஹ் காக்கா அவர்கள், எனது ஆசிரியரும் - மாமாவுமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ அவர்கள், கதீஜத் மாமி அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. أللّـهـــمّ اغـفـــر لـه وارحـمـــه إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by yahya mohiadeen (dubai) [08 March 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39529

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

பாசதிற்குரிய இஸ்மாயில் மாமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம். என்பதால் என் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

நான் சிறுவனாய் இருக்கும்போது பெரும்பாலும் அவர்கள் வீட்டில்தான் இருப்பேன். அவர்களின் பிள்ளைகளில் ஒருவனாகவே என்னையும் அன்பால் அரவனைத்தர்கள். தினந்தோறும், தோட்ட வேலைகள், அவ்வப்போது ஏற்படும் சிற்சில மின் பழுதுகள், தண்ணீர் குழாய் பழுது, இன்னபிற பணிகளுக்கு நான் அவர்களுடன் உற்ற துணையாய் இருந்திருக்கிறேன். கடந்த 20 வருடங்களுக்கு முன் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளை இப்போது மனதில் அசை போட்டு பார்க்கிறேன். கண்களில் நீர் சொரிகின்றது.

1992 செப்டம்பர் 13, 14 தேதிகளில் நமதூரில் நடைபெற்ற பெரும் கலவரத்தால், நான் பைபாஸ் ரோடு வரை வந்து ஊருக்கு வர முடியாமல் மீண்டும் தூத்துக்குடி சென்று தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் சென்னை செல்ல இருந்தேன். அவ்வமயம் அவர்களின் தொழில் நிமித்தமாக அவர்களும் தூத்துக்குடி வந்திருந்தார்கள். அவர்களும் ஊர் திரும்ப முடியாமல் தூத்துக்குடியிலேயே தங்க வேண்டியதாயிற்று. நான் வந்த விஷயம் கேள்விப்பட்டு, நான் இருந்த இடம் தேடி வந்து, என்வேலை முடிவதற்கு உதவி செய்தும் நான் புறப்படும் வரை என்னோடு இருந்தவர்கள்.

சிறந்த உபகாரி, உழைப்பால் உயர்ந்தவர், நற்குணங்கள் நிரம்பவே பெற்றவர். வாழ்வின் பிற்பகுதியில் நோயினால் சிரமப்பட்டபோதும், பொருளின்றி கஷ்டப்படும் ஏழ்மையான குடும்பங்களுக்கு உதவ வேண்டி என்னிடமும், மற்றவர்களிடமும் முறையிட்டவர்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் உயர்ந்த அந்தஸ்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [08 March 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39532

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து '' பாவ பிழைகளையும் பொருத்து அவனின் மிகவும் உன்னதமான '' ஜன்னதுல் பிர்தௌஸ் '' என்னும் உயர்ந்த சுவன பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்......

மர்ஹும் அவர்களின் குடும்பத்தார் யாவர்களுக்கும் வல்ல இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன் ....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved