குவைத் காயல் நல மன்றத்தால் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், அவ்வமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் செயலாளர் கே.எஸ்.அமானுல்லாஹ் மரைக்கார் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
பொதுக்குழுக் கூட்டம்:
குவைத் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டம் 26-02-2015 வியாழக்கிழமையன்று 18.00 மணியளவில் மக்ரிப் தொழுகைக்கு பின் Salmiya- வில் மன்றத் தலைவர் எஸ்.எம்.ஹஸன் மவ்லானா இல்லத்தில் நடைபெற்றது. மாணவர் பீ.எம்.எம்.ஷேக் நூருத்தீன் கிராஅத் ஓதினார்.
மன்றச் செயல்பாடுகள் குறித்து விளக்கம்:
மன்றத் தலைவர் எஸ்.எம்.ஹசன் மௌலானா அனைவரையும் வரவேற்று தலைமை உரையாற்றினார். மன்றம் செய்து வரும் காரியங்களை விளக்கி, இன்னும் ஆற்ற வேண்டிய பணிகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
முதல் அம்சமாக, புதிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நடப்பு நிர்வாகிகள் அனைவரும், புதியவர்களை இப்பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். மன்றம் தொடங்கியது முதல் இப்பொறுப்புகளை தொடர்ந்து தாங்கள் வகித்து வருவதாகவும், தங்களாலான அனைத்து உதவி - ஒத்துழைப்புகளையும் புதிய நிர்வாகிகளுக்கு வழங்குவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். ஆனால் உறுப்பினர்கள் நடப்பு நிர்வாகிகளை வற்புறுத்தி, கீழ்க்கண்டவாறு புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுத்தனர்:-
தலைவர்:
எஸ்.எம்.ஹஸன் மவ்லானா
செயலாளர்:
கே.எஸ்.அமானுல்லாஹ் மரைக்கார்
துணைச் செயலாளர்:
எஸ்.எம்.டீ.மொகுதூம் முஹம்மத்
பொருளாளர்:
எஸ்.எம்.எம்.அபூதாஹிர்
மருத்துவ உதவிக்கு நிதியொதுக்கீடு:
மருத்துவ உதவிகளுக்காக 30 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஊர் நடப்புகள் மற்றும் பொது விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
குவைத்தில் வேலைவாய்ப்பு பெற்றதன் அடிப்படையில், மன்றத்தின் புதிய உறுப்பினரான ஸதக் ஜாபிர், நடப்பு கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.
விருந்துபசரிப்பு:
உறுப்பினர் Shilly வி.என்.எஸ்.அப்துல் ரஹ்மானுக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியைப் பரிமாறும் வகையில், அவர் மன்ற உறுப்பினர்களுக்கு விருந்தளித்தார்.
அவரது புதிய மகவு எல்லா நல - வளங்களையும் பெற்று, ஈருலக வெற்றியுடன் வாழ அனைவரும் வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குவைத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |