தமிழகத்தில் ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு இம்மாதம் 05ஆம் நாளன்று துவங்கியது. காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியிலிருந்து நடப்பாண்டு 30 மாணவர்கள், 21 மாணவியர் என மொத்தம் 51 மாணவ-மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.
தேர்வுக்குச் செல்வதற்கு முன்பு, மாணவர்கள் நல்ல முறையில் தேர்வெழுதுவதற்காக பள்ளி வளாகத்தில் இறைப்பிரார்த்தனை செய்யப்பட்டது.
பின்னர், தேர்வெழுதச் செல்லும் மாணவ-மாணவியருக்கு பள்ளி நிர்வாகிகளான ஆர்.எஸ்.அப்துல் காதிர், ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, எம்.எல்.ஷேக்னா லெப்பை உள்ளிட்டோர் தேர்வறை நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) வழங்கி, வாழ்த்தி வழியனுப்பினர்.
தகவல் & படங்கள்:
K.M.T.சுலைமான்
(துணைச் செயலாளர் - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி)
கடந்தாண்டு (2014) நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |