DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பிப்ரவரி 25 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA
சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கு, தொடர்ந்து ஜூலை 10, 2014, ஆகஸ்ட் 28, 2014, நவம்பர் 13, 2014, டிசம்பர் 2, 2014, ஜனவரி 29, 2015 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தது.
ஆறு எதிர் மனுதாரர்களில், DCW நிறுவனம், தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், DCW தொழிற்சாலைக்கு ஆவணங்கள் தயார் செய்த இரு நிறுவனங்களில் ஒன்றான PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை, ஆகியோர் பதில் தாக்கல் செய்திருந்தனர்.
பிப்ரவரி 25, 2015 அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் DCW நிறுவனத்திற்கு ஆவணங்கள் தயாரித்த இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனமான CHOLAMANDALAM MS RISK SERVICES LTD நிறுவனம் சார்பாக பதில்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தற்போது, ஆறு எதிர் மனுதாரர்களும் பதில்கள் தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கினை - மார்ச் 17க்கு தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.
இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம்
மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு, CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.
|