பன்னிரண்டாம் வகுப்புக்கான அரசு பொது தேர்வுகள் - மார்ச் 5 அன்று துவங்கின. தேர்வுகளுக்கான கட்டுப்பாட்டு அறையினை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
மேல்நிலை / இடைநிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச் / ஏப்ரல் 2015
பொதுமக்கள் / மாணவர்கள் தொடர்பு கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் கட்டுப்பாட்டு அறை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை 05.03.2015 முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மற்றும் 19.03.2015 முதல் நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள் / மாணவர்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் / மாணவர்கள் தங்களது புகார்கள் மற்றும் கருத்துக்களை, அரசுத் தேர்வுகள் துறை கட்டுப்பாட்டு அறையினை கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தெரிவித்து / தொடர்பு கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தேர்வுக் கட்டுப்பாட்டு அறை - தேர்வுக் கட்டுப்பாட்டு அறை -தொடர்பு எண்கள் தொடர்பு எண்கள்
1. 8012594101
2. 8012594116
3. 8012594120
4. 8012594125
அரசுத் தேர்வுகள் இயக்குநர்
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9. |